- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு - தேசிங்கு பெரியசாமி இணையும் புதிய படம், தயாரிப்பாளர் போட்ட கண்டிஷன் - 3...

சிம்பு – தேசிங்கு பெரியசாமி இணையும் புதிய படம், தயாரிப்பாளர் போட்ட கண்டிஷன் – 3 நாளில் இதெல்லாம் நடக்கிற கதையா? சவாலில் ஜெயிப்பார்களா?

- Advertisement -

நவரச நாயகன் கார்த்திக் போலவே நல்ல திரைக்கலைஞராக இருந்தும் வம்பு தும்பு செய்வதில் வல்லவராக பெயர் பெற்றவர் சிம்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கமலுக்கு அடுத்தபடியாக வந்திருக்க வேண்டிய நவரச நாயகன் கார்த்திக், நடிப்பின் மீது போதிய ஆர்வம் அக்கறை காட்டாததால் அவரது உச்சத்தை தொடவில்லை என்று ஒரு விழாவில் கலைஞர் கருணாநிதியே குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் திரையுலக அஷ்டவதானி டி ராஜேந்தர் மகனாக உள்ள சிலம்பரசன், பல்வேறு திறமைகளை வைத்திருந்தும் சில நேரங்களில் தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தராமல் அவரது படங்களின் எண்ணிக்கையே தமிழ் சினிமாவில் குறைந்து போய்விட்டது.

- Advertisement -

ஆனால் இதெல்லாம் மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு இருந்த புகார்கள்தான். இப்போது எல்லாம் சிம்பு, ஒரு திரைக்கலைஞனாக சாதிக்க தயாராகி வருகிறார் என்பதை அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. மாநாடு பத்து தல படங்களுக்கு சிம்பு கமலுடன் நடித்த தக்லைப் படம் வரும் ஜூன் 5ல் வெளிவர உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிக்க சிம்பு முழு ஒத்துழைப்பு தந்திருக்கிறார். காலை 6 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார்.

அதே போல் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த யுவன் சங்கர் ராஜா இசை விழாவிலும் பங்கேற்று, சிம்பு அசத்தியிருக்கிறார். பல ஆண்டுகளாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒரு வரலாற்று படம் பெண்டிங்கில் இருந்து வருகிறது. பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க, அதுவும் சிம்புவை நம்பி தயாரிக்க முன்வர மறுக்கின்றனர். இதனால் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இருவருமே பலத்த மன உளைச்சலில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, இந்த படத்தை தயாரிக்க அவர் முன்வந்துள்ளார். ஆனால் இவர்கள் தரப்பில் ரூ. 170 கோடி பட்ஜெட் என்க, அவர் ரூ. 100 கோடி பட்ஜெட் என்றால் ஓகே என முன்வந்துள்ளார். ஆனால் இவர்கள் விடாப்பிடியாக ரூ. 170 கோடியில்தான் வரலாற்று படத்தை தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து தொழிலதிபர் கண்ணன் ரவி, அந்த படத்துக்கான ஒரு டீசரை 3 நாட்களில் தயார் செய்யுங்கள். அதற்கான ஷூட்டிங் செலவை நானே தருகிறேன். அந்த டீசர் எனக்கு பிடித்தால் ரூ. 170 கோடி பட்ஜெட்டிலேயே தயாரித்து விடலாம் என்று கூறியிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி, சிம்பு தரப்பும் ஓகே சொல்லிவிட்டது. ஆனால் 3 நாட்களில் வரலாற்று கதையை முன்னோட்டமாக டீசரில் சொல்வது சாத்தியமா, இந்த சவாலில் இவர்கள் ஜெயிப்பார்களா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்