- Advertisement -
Homeபொழுதுபோக்குராதிகா சரத்குமார் நடிப்பு வேற லெவல்… ஆனா அந்த குறும்படம்தான் தாய்கிழவி படமாக மாறி இருக்கிறதா?...

ராதிகா சரத்குமார் நடிப்பு வேற லெவல்… ஆனா அந்த குறும்படம்தான் தாய்கிழவி படமாக மாறி இருக்கிறதா? – திடீரென கிளம்பிய சர்ச்சை!

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கிழக்கு போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் கே பாக்யராஜ் விஜயகாந்த் சரத்குமார் சத்யராஜ் பிரபு என பல முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இப்போதும் அம்மா பாட்டி கேரக்டரில் ராதிகா நடித்துக்கொண்டு இருக்கிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ராடன் பிக்சர்ஸ் என்ற பெயரில் டிவி சீரியல்களையும் திரைப்படங்களையம் தயாரித்து வரும் ராதிகா சரத்குமார் சித்தி அண்ணாமலை வாணி ராணி என பல டிவி சீரியல்களிலும் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். சூரியவம்சம் படத்தில் நடித்த பிறகு நடிகர் சரத்குமாரை ராதிகா 3வது திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலத்தின் அம்மா கேரக்டரில் நடிகை மனோரமா நடித்திருப்பார். அவரை ஒரு காட்சியில், தாய்கிழவி ரொம்ப நீளமா பேசாதே, மூச்சு வாங்கும் என்று பொன்னம்பலம் கிண்டலாக பேசுவார். அந்த காட்சியும் அந்த தாய்கிழவி என்ற கிண்டலான பெயரும் பிரபலமாகி விட்டது.

இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை நித்யாமேனன் ஜோடியாக நடித்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தாய்கிழவி தாய்கிழவி என்ற ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்போது நடிகை ராதிகா சரத்குமார் நடித்த ஒரு படத்துக்கும் தாய்கிழவி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தாய்கிழவி படம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் இன்று பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது, தாய்கிழவி என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ராதிகா சரத்குமாரின் சிறந்த நடிப்புக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம். ஆனால் நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா என்ற ஒரு யூடியூப் நடத்தி வரும் பிரதீப் குமார் காளியப்பன் என்பவர், எனக்கு ஒரு வீடியோ லிங்க் அனுப்பியிருக்கிறார்.

அவர் இதுவரை 13 குறும்படங்களை இயக்கிவர். அதில் சுருட்டுகிழவி என்ற பெயரில் அவர் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அந்த குறும்படம் பார்த்தால் அப்படியே தாய்கிழவி படம் போலவே இருக்கிறது. டிரெய்லர் அதை உறுதிபடுத்துகிறது. அந்த குறும்படம் 2021ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அதுதான் தாய்கிழவி படமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்று அந்தணன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்