- Advertisement -
Homeபொழுதுபோக்குபோயும் போயும் அவருக்கு நான் ஜோடியா? இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகை திரிஷா...

போயும் போயும் அவருக்கு நான் ஜோடியா? இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகை திரிஷா – அட அந்த சூப்பர்ஹிட் படமா அது?

- Advertisement -

இன்று தமிழில் பல படங்கள் 2 பாகங்களாக வெளிவருகின்றன. அதற்கு அச்சாரம் போட்டவரே இயக்குனர் ராஜமவுலிதான் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் பாகுபலி படம் 2 பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற பிறகுதான், பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக எடுக்கும் முடிவுக்கே துணிச்சலாக மணிரத்னம் வந்திருக்கிறார்.

அதாவது ஒரு படம் மாஸ் ஹிட் கொடுத்தால் அந்த படத்தின் பெயரிலேயே 2ம் பாகம் 3ம் பாகம் 4ம் பாகம் என்று வருவது வேறு. அதாவது அந்த படத்தின் 2ம் பாகமாக 3ம் பாகமாக இருந்தாலும் படத்தின் கதை வேறு களத்தில் இருக்கும். நடிகர், நடிகைகள் மாறியிருப்பார்கள். முதல் படத்தின் தொடர்ச்சியாக அந்த கதை இல்லாமல் வேறு வேறு கோணங்களில் பயணிக்கும்.

- Advertisement -

ஆனால் ஒரே கதையை 2 ஆக அல்லது 3 ஆக பிரித்து எடுப்பதுதான் ஒரு படம் 2 பாகங்களாக 3 பாகங்களாக வருவதற்கு சரியாக இருக்கும். அப்படிதான் பாகுபலி படம் இருந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பொன்னியின் செல்வன் படமும் முதல் பாகம் 2ம் பாகம் என தொடர்ச்சியாக வெளியானது.

அதே நேரத்தில் இந்தியன் 2 விடுதலை 2 இனி உருவாகி வரும் கைதி 2 சர்தார் 2 ஜெயிலர் 2 தனி ஒருவன் 2 விக்ரம் 2 போன்ற படங்கள் அந்த படத்தின் பெயர் கொண்ட கதையாக இருக்கலாமே தவிர, அதே படத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகமாக இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதனால்தான் இந்தியன் 2 விடுதலை 2 படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

- Advertisement -

இந்நிலையில் ராஜமவுலி போன்ற இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் பலரும் ஆர்வம் காட்டும் நிலையில் நடிகை திரிஷா அவருக்கு தேடி வந்த வாய்ப்பை மறுத்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழில் முன்னணி நடிகையான திரிஷா தெலுங்கு மலையாளம் என பிறமொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2010ம் ஆண்டில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மரியாத ரமண்ணா. இந்த படத்தில் நாயகனாக சுனில் நடித்திருக்கிறார். இவர் ஜெயிலர் மார்க் ஆண்டனி புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். காமெடி நடிகராகவும் வில்லனாகவும் நடிப்பவர். சுனிலுக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை கேட்ட போது, போயும் போயும் இவருடன் நடித்தால் என் கேரியரே போய்விடும் என்று மறுத்துவிட்டார் திரிஷா. பிறகு சலோனி அஸ்வனி என்ற நடிகை அந்த படத்தில் சுனிலுக்கு நாயகியாக நடித்த நிலையில் படம் பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்