- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடிக்காமல் வெளிவரும் அயலான் 2, அதிரடியாக முடிவெடுத்த தயாரிப்பாளர் - இது வேற லெவல்...

சிவகார்த்திகேயன் நடிக்காமல் வெளிவரும் அயலான் 2, அதிரடியாக முடிவெடுத்த தயாரிப்பாளர் – இது வேற லெவல் சம்பவமாக இருக்கே?

- Advertisement -

கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் கேஜேஆர் ராஜேஷ் தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் ரிலீஸ் ஆனது. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். ஏலியன் இதில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. படம் ரிலீஸாகி 10 நாட்களுக்கு மேலான நிலையில் பெரிய அளவில் படம் வசூலை குவிக்கவில்லை.

அயலான் மட்டுமின்றி தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கும் விமர்சன ரீதியாக இதே நிலைதான் என்றாலும், வசூலில் அந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும், வெளிநாடுகளிலும் கேப்டன் மில்லர் வசூல் கிடைத்து வருகிறது.

- Advertisement -

ஆனால் இந்த இரண்டு சுமாரான படங்களுக்கு இடையில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் 1 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 17 கோடி ரூபாய்க்கு இந்த படம் வசூலை குவித்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது.

இதற்கிடையே அயலான் படத்தை இன்னும் ஒருபடி உயர்த்தும் முயற்சியாக அயலான் 2 படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். அதாவது சுமாராக ஓடிய படத்தை, 2ம் பாகம் எடுப்பதாக தெரிந்தால் உண்மையில் பெரிய வெற்றிப்படம் என பப்ளிசிட்டியிலும் ரசிகர்கள் வரலாம் என்ற யுக்தியும் இதில் ஒளிந்துள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஆறு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படம் என்பதால், இந்த படத்தில் வெட்டி எடுக்கப்பட்ட காட்சிகள் ஏராளமாக உள்ளன. எனவே, அவற்றை எல்லாம் ஒட்டவைத்தால், மிக எளிதாக 2ம் பாகம் கிடைத்துவிடும் என்ற சூழலில், 2ம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காமலேயே விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிட முடிவாகி உள்ளது.

கடைசியில் இந்த குறுக்கு வழியில் தயாரிப்பாளர் இறங்க காரணம், சிவகார்த்திகேயனுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே வரவு செலவு பிரச்னையும் உள்ளது. தவிர 2ம் பாகத்தை அவர் நடிக்காமல் வெளியிட்டால் அவருக்கு சம்பளமும் தர அவசியமில்லை என்ற முடிவில் இந்த திடீர் அதிரடியில் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் இறங்கிவிட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்