- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு முறை மட்டுமே காதல் வருவதல்ல, பலமுறை வந்தாலும் அது காதல்தான் - நடிகை தமன்னா...

ஒரு முறை மட்டுமே காதல் வருவதல்ல, பலமுறை வந்தாலும் அது காதல்தான் – நடிகை தமன்னா சொன்ன தத்துவம் கேட்டு புல்லரித்துப் போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பிறகு வியாபாரி கல்லூரி சுறா அயன் வேங்கை படிக்காதவன் பையா தோழா என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். தெலுங்கில் அவர் நடித்த பாகுபலி படமும் அவரது ஆக்சன் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தமிழை தொடர்ந்து தெலுங்கில் நிறைய படங்களில் கவர்ச்சியாக நடித்த தமன்னா பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அங்கு வெப் சீரிஸ் ஒன்றில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்த தமன்னா உதட்டு முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் இந்தி நடிகைகளே மிரளும் அளவுக்கு பெரிய அளவில் பெர்பாஃமென்ஸ் காட்டி ரசிகர்களை திணறடித்தார்.

- Advertisement -

இந்த சூழலில் தன்னுடன் வெப் சீரிஸில் நடித்த விஜய் வர்மா என்பவருடன் நடிகை தமன்னா நெருக்கம் காட்டினார். இருவரும் இரவு நேரங்களில் டேட்டிங் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. தமன்னாவின் கவர்ச்சி ஆடைகளை பார்த்து இது தமன்னா தானா என தமிழ் ரசிகர்களே தடுமாறி போய்விட்டனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடிகை தமன்னாவை நடிகர் விஜய் வர்மா பிரேக்கப் செய்துவிட்டு வேறு ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தமன்னா கூறியதாவது, காதல் என்றால் என்ன உறவு என்பதில் மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.

- Advertisement -

காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாய உள்ளது. உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்து மற்றவர்கள் நீங்கள் விரும்புவதை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும் தருணத்தில் காதல் வெறும் வியாபாரம். ஒரு பரிவர்த்தனை தான். ஒருவரை ஒருவர் தனித்தனியாக காதலிக்கலாம். ஆனால் அந்த உறவே காதலை வரையறுக்கிறது என்று அர்த்தம் அல்ல. நாம் ஒருவரை நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை சுதந்திரமாக விட வேண்டும்.

உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணிப்பதன் மூலம் நீங்கள் நேசிக்க முடியாது. ஒரே ஒரு உண்மையான காதல் என்ற வழக்கமான சினிமா கருத்தை உடைத்து காதல் என்பது ஒரே ஒரு அனுபவத்திற்கு மட்டும் உரியதல்ல. காதல் என்பது ஒரு முறை மட்டும் நிகழும் ஒன்றல்ல. நீங்கள் தீர்மானிக்கும் வரை அது நிகழலாம். அந்த உணர்ச்சி வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுவது இல்லை. அது உள்ளுக்குள் உருவாக்கப்படுகிறது என்று நடிகை தமன்னா காதல் குறித்து தத்துவமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்