- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் விசு இயக்கி நடித்த இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஆங்கில படத்தின் ரீமேக்கா? அசந்து...

டைரக்டர் விசு இயக்கி நடித்த இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஆங்கில படத்தின் ரீமேக்கா? அசந்து போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

ஹாலிவுட் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும்போது அந்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. ஹாலிவுட்டில் பெரும்பாலும் ஆக்சன் ரொமான்ஸ் மற்றும் பேண்டஸி படங்கள்தான் அதிகமாக வெற்றி பெறுகின்றன. அந்த படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஆனால் அபூர்வமாக ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு குடும்ப திரைப்படத்தை இயக்குனர் விசு தமிழில் ரீமேக் செய்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான். இயக்குனர் விசு இயக்கி அவரே நடித்த படம் தான் வரவு நல்ல உறவு. விசு இயக்கிய படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் வரவு நல்ல உறவு படமும் ஒன்று.

- Advertisement -

கடந்த 1937ம் ஆண்டு வெளியான மேக் வா பார் டுமாரோ என்ற ஆங்கில படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து இயக்குனர் விசு வரவு நல்ல உறவு திரைப்படமாகி உருவாக்கி தந்தார். ஒவ்வொரு மனிதனும் தனது ஓய்வு காலத்தில் அவர் சம்பாதித்த பணத்தை கையில் வைத்திருந்தால் தான் அவனுக்கு உறவுகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று ஒருவர் வாழ்கிறார்.

ஆனால் ஓய்வூதிய பணம் முழுவதையும் தனது பிள்ளைகளுக்கு மொத்தமாக பிரித்துக் கொடுத்துவிட்டு அவர்கள் நம்மை அன்பாக பார்த்துக் கொள்வார்கள் என்று கருதி ஏமாறும் இன்னொருவர். இந்த இருவரில் யாருடைய வாழ்வு சிறப்பாக இருந்தது? அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திக்கிறார்கள் என்பதுதான் அந்த ஹாலிவுட் படத்தின் கதை.

- Advertisement -

இந்த ஆங்கில படம் தெலுங்கில் டப்பு பலே ஜப்பு என்றும் மலையாளத்தில் அச்சம் கொம்பத்து அம்மா வரம்பது என்றும் மற்றும் பெங்காலியில் அமடர் சொந்தன் என்றும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் விசு இயக்கத்தில் வரவு நல்ல உறவு என்ற படமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் விசு கிஷ்மு எஸ்வி சேகர் ஓமக்குச்சி நரசிம்மன் ரேகா இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கவிதாலயா பிக்சர்ஸ் சார்பில் கே பாலச்சந்தர் இந்த படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த படத்துக்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதை இயக்குனர் விசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இந்த படம் சமூகத்தில் ஒரு குடும்பத் தலைவனுக்கும் அவனை சார்ந்த உறவுகளுக்கு இடையிலான பிணக்குகள், பணத்தால் எப்படி பிரச்சனைகளை உருவாகிறது என்பதை சொல்லும் ஒரு அற்புதமான குடும்ப படைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்