தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கமல்ஹாசன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் ஒரு திரைப்பட கலைஞராக நடிகர் கமல்ஹாசன் தொட்ட சிகரங்கள் யாராலும் நெருங்கக் கூட முடியாத மிகப்பெரிய உச்சங்க்களாகும்.
ஏனெனில் சினிமாவில் அந்த காலத்திலேயே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, யாரும் யோசிக்காத கோணங்களில் கூட பல புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு தனது கலைத்திறமையை அதில் வெளிப்படுத்தியவர் தான் நடிகர் கமலஹாசன். குறிப்பாக 16 வயதினிலே இந்தியன் அவ்வை சண்முகி அபூர்வ சகோதரர்கள் தசாவதாரம் என பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பை வழங்கியவர் கமல்ஹாசன்.
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் அந்த நேரத்தில் மௌன படங்களாக தான் இருந்தது. அப்போது படங்கள் ஓடும் திரைகளில் வெறும் காட்சிகள் மட்டுமே இருக்கும். பின்னால் எந்த விதமான ஒலியும் இருக்காது. அதாவது படத்தை வெறும் மௌன படங்களாக தான் பார்க்க வேண்டும். பின்னர் விஞ்ஞான வளர்ச்சியில் அவை பேசும் படங்களாக மாறின.
அதன்பிறகுதான் திரைப்படங்களில் ஹீரோக்கள் மற்ற கதாபாத்திரங்கள் திரையில் பேச தொடங்கினர். இசையும் வந்தது. பாடல் காட்சிகளும் ஒலித்தது. இந்த சூழ்நிலையில் ஒரு சோதனை முயற்சியாக நடிகர் கமல்ஹாசன் நடித்த பேசும் படம் வெளிவந்தது. ஆனால் இந்த படத்தில் யாருமே பேச மாட்டார்கள். பேசும் படம் என்று டைட்டில் வைத்துக் கொண்டு யாருமே பேசாத ஒரு படத்தை படத்தில் நடித்தவர்தான் நடிகர் கமல்ஹாசன்.
சங்கீதம் சீனிவாசராவ் பேசும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த 1987ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை அமலா நடித்திருந்தார். பேசும் படத்துக்கு பிறகு இதுபோன்ற படங்கள் எதுவும் தமிழ் சினிமாவில் வரவில்லை. இப்போது 2026ம் ஆண்டில் வசனங்கள் ஏதுமின்றி மௌனமே கதையாக பேசும் ஒரு வலுவான துணிச்சலான படைப்பாக காந்தி டேக்ஸ் என்ற புதிய படம் உருவாகி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் இரட்டை கதாநாயகர்களாக விஜய் சேதுபதி அரவிந்த்சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி சித்தார்த் ஜாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் இந்த படம் ஏற்கனவே பல்வேறு திரைப்பட விழாக்களை திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், வரும் 30ம் தேதி இந்த படம் வெளியாகிறது. படத்தில் ஒரு வார்த்தையும் பேசாமல் உணர்வுகளுடன் பேசும் ஒரு அபூர்வமான சினிமா அனுபவமாக இருக்கும். ரசிகர்கள் இதை மிக ரசிப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.





