தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ராம்கி. இவர் இணைந்த கைகள் செந்தூரப்பூவே பெண்புத்தி பின்புத்தி சின்ன பூவே மெல்லப் பேசு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக ராம்கி நடித்த செந்தூரப்பூவே படத்தில் நடிகர் விஜயகாந்த் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராம்கி நடித்த பல படங்களில் அவரது சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படம் மருதுபாண்டி. இந்த படத்தை இயக்குனர் மனோஜ் குமார் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் ராம்கியுடன் சீதா நிரோஷா நாசர் எஸ் எஸ் சந்திரன் செந்தில் கோவை சரளா ராகவி மற்றும் பிரதீப் சக்தி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
மருதுபாண்டி படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். அம்மாபட்டி என்ற ஊரில் கதாநாயகன் மருதுபாண்டி (ராம்கி) பரிசல ஓட்டுவார். இரவில் ஊரை பாதுகாக்கும் ஊர்க்காவலாளியாக இருப்பார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியான தங்கை இருப்பார். அவரை ஒரு தாயைப் போல மருதுபாண்டி பாதுகாத்து பராமரித்து வருவார்.
அவர் செய்யும் வேலைக்காக ஊர் மக்கள் உணவு ஊதியம் கொடுத்து உதவுவார்கள். அம்மாபட்டிக்கு நடனம் ஆட வந்த நடனக்குழுவைச் சேர்ந்த கனகவள்ளியை ( சீதா) அங்கேயே தனிமையில் விட்டு விட்டு சென்று விடுவார்கள். அதனால் ஊர்மக்கள் கனகவள்ளிக்கு தங்குவதற்கான ஒரு வீட்டை அடைக்கலமாக கொடுப்பார்கள். கனகவள்ளியும் மெதுவாக மருதுபாண்டியன் மேல் காதல் கொள்கிறார்.
திடீரென ஒரு நாள் மருதுபாண்டியை கைது செய்ய அந்த ஊருக்கு போலீஸ் படையே வருகிறது. உண்மையில் மருதுபாண்டி என்பவர் யார்? அவர் தங்கைக்கு என்ன நடந்தது? இடையில் வந்து சேர்ந்த கனகவள்ளி யார் என்பது படத்தின் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் மருதுபாண்டி படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் முதலில் சத்யராஜ் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன்பிறகு இந்த படம் ராம்கி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மருதுபாண்டி படம் கன்னட மொழியில் கொல்லூர் காலா என்ற டைட்டிலில் வெளியானது. அதேபோல் இந்தியில் கோவிந்தா நடிப்பில் ஆக் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு தயாரித்திருந்தார். மருதுபாண்டி படத்தில் நடித்த போதுதான் நடிகர் ராம்கியும் நிரோஷாவும் காதலித்து அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





