- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடித்த அந்த 2 படங்களும் ஒரே கதை தானா? இப்படி ரசிகர்களை ஏமாத்துப்புட்டீங்களே… -...

ரஜினி நடித்த அந்த 2 படங்களும் ஒரே கதை தானா? இப்படி ரசிகர்களை ஏமாத்துப்புட்டீங்களே… – கலாய்க்கும் வீடியோ வைரல்!

- Advertisement -

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டில் வெளியான படம் முத்து. இதில் பணக்காரரான ஜமீன்தார் ரஜினியை அவரது உறவினர் ரகுவரன் ஏமாற்றி விடுவார். இதனால் விரக்தியடைந்த ரஜினிகாந்த் சொத்துகளை எல்லாம் ரகுவரனுக்கே எழுதி வைத்து விட்டு சாமியாராக போய் விடுவார். அவரது மகன்தான் ரஜினி.

அந்த சொத்துகளின் ஒரே வாரிசு ரஜினி அதே வீட்டில் வேலைக்காரராக இருப்பார். அவர்தான் படத்தின் ஹீரோ. அவரை மீனா காதலிப்பார். அந்த மீனாவை ஜமீன்தாராக இருக்கும் சரத்பாபுவும் காதலிப்பார். இப்படி முக்கோண காதல் கதையில் இந்த முத்து படத்தின் கதை போகும். ஹீரோயினை 2 பேர் காதல் செய்வார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று மீனாவிடம் ரஜினி மேடையில் பஞ்ச் டயலாக் பேசுவார். இதில் ரஜினிக்கு ஒரு ஓல்டு கெட்டப் இருக்கும். சாமியராக கிழவராக தான் ரஜினி சில காட்சிகளில் வருவார். மக்களுக்கு காசை அள்ளி அள்ளி கொடுக்கும் ஜமீன்தாராக அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் வருவார். இந்த படத்தில் ரஜினியுடன் காமெடி செய்தவர் நடிகர் செந்தில். இதில் கெஸ்ட் ரோலில் இறுக்கி அணைச்சு உம்ம தருமோ காமெடி காட்சியில் கேஎஸ் ரவிக்குமாரும் வருவார். படத்துக்கு இசை ஏஆர் ரகுமான். படத்தின் ஹீரோ பேர் முத்து. படத்தின் டைட்டிலும் முத்துதான்.

இதையடுத்து 1999ம் ஆண்டில் வெளியான ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் படையப்பா. இந்த படத்தில் ஊரே மதிக்கிற ஒரு பெரியவராக ஜமீன்தாராக நடிகர் சிவாஜி இருப்பார். ஆனால் அவரது தம்பி மணிவண்ணன் அவரை ஏமாற்றி விடுவார். தனது சொத்துகளை எல்லாம் தம்பிக்கு எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சிவாஜி போய் விடுவார். அவரது மகன்தான் ரஜினி. இதில் வேலைக்காரியை ரஜினி காதலிப்பார். ரஜினியை ரம்யா கிருஷ்ணன் காதலிப்பார். இதுவும் ஒரு முக்கோண காதல் கதையாக போகும்.

- Advertisement -

இந்த படத்திலும் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு காட்சியில் நீலாம்பரி ரம்யாகிருஷ்ணனுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்வார். இந்த படத்திலும் ரஜினி ஓல்டு கெட்டப்பில் 2 மகள்களுக்கு தந்தையாக வருவார். படையப்பாவாக ஊர் மக்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி தருவார். மேலும் காமெடிக்கு செந்தில்தான். கெஸ்ட் ரோலில் கேஎஸ் ரவிக்குமாரும் ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிடுவார். படத்தில் இசை ஏஆர் ரகுமான்தான். படத்தின் ஹீரோ பெயர்தான் படத்தின் டைட்டில் படையப்பா.

வழக்கமாக மற்ற படங்களை சுட்டுதான் புதிய படம் எடுப்பது தமிழ் சினிமாவில் பழக்கம். ஆனால் ஏற்கனவே வந்த ரஜினி படக்கதையை அப்படியே சுட்டு முத்து படத்தை மீண்டும் படையப்பா வாக தந்த பெருமை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாருக்கும் நடிகர் ரஜினிக்கும் மட்டுமே சேரும். இதில் ஒரே ஒரு விஷயம் நீலாம்பரி கேரக்டரை பொன்னியின் செல்வன் கதையில் உள்ள நந்தினி கேரக்டரில் இருந்து ரஜினி உருவியதுதான். எப்படி எல்லாம் ரசிகர்களை ஏமாத்தறாங்க என்று ஒரு வீடியோ 2 படங்களையும் ஒப்பிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்