- Advertisement -
Homeபொழுதுபோக்குநேற்று வரை 25 நாட்களில் தி கோட் படத்தின் வசூல் நிலவரம், மொத்தமே இவ்ளோதானா? 1000...

நேற்று வரை 25 நாட்களில் தி கோட் படத்தின் வசூல் நிலவரம், மொத்தமே இவ்ளோதானா? 1000 கோடி ரூபாய் இலக்கு என்னாச்சு? – ஏமாற்றமடைந்த தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ. எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த இந்த படம் 585 கோடி ரூபாய் வசூலித்தது. அதேபோல் இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்ட் செய்திருந்தார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருந்தார். அதில் மகன் கேரக்டரில் வில்லன் நடிப்பில் அதகளம் செய்திருந்தார். மேலும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், வைபவ், ஜெயராம், சினேகா, லைலா, கனிகா, யுகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

மேலும் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன், திரிஷா, ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு காட்சியில் விஜயகாந்த் என இந்த படத்தில் பல ஸ்பெஷல் அயிட்டங்களை கொண்டு வந்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படம் மொத்தம் 385 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதில் விஜய் சம்பளமே ரூ. 200 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 5ம் தேதி தி கோட் படம் வெளியான நிலையில், நேற்று 29ம் தேதியுடன் 25 நாட்களை கடந்து இருக்கிறது. 25 நாட்களில் தி கோட் படத்தின் மொத்த வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. நேற்று 25வது நாள் முடிவில் உலகம் முழுவதும் தி கோட் படத்தின் மொத்த வசூல் 460 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 220 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தி கோட் படம் வசூலித்துள்ளது. இந்திய அளவில் 305 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடகா இரண்டு மாநிலங்களும் சேர்த்து 30 கோடி ரூபாய், வெளிநாட்டில் 125 கோடி வசூல் செய்திருக்கிறது. 500 கோடி ரூபாய் வசூல் சாதனையை தி கோட் படம் எட்டியிருந்தால், இதுதான் விஜயின் இரண்டாவது 500 கோடி ரூபாய் கடந்த படமாக இருந்திருக்கும்.

ஆனால் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் பெரிய அளவில் தி கோட் படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் தி கோட் படத்தில் இடம்பெற்ற காட்சிகள், தமிழக ரசிகர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டதாக இருந்தது என்று கூறப்படுகிறது. எனினும் படம் ரிலீஸாகி 25 நாட்கள் கடந்தும் 500 கோடி ரூபாயை கூட விஜய் நடித்த தி கோட் படம் எட்டவில்லை என்பது தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்