- Advertisement -
Homeபொழுதுபோக்குகுஷ்புவை நீங்க ஏதாவது துன்புறுத்துனா, நான்தான் முதல்ல உங்ககிட்ட சண்டைக்கு வருவேன் - இப்படி...

குஷ்புவை நீங்க ஏதாவது துன்புறுத்துனா, நான்தான் முதல்ல உங்ககிட்ட சண்டைக்கு வருவேன் – இப்படி சுந்தர் சியை மிரட்டிய நடிகர் இவரா

- Advertisement -

நடிகை குஷ்பு, இந்தி படங்களில் நடித்து, தமிழ் சினிமாவுக்கு வந்தவர். தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றி விழா, சின்னதம்பி போன்ற படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ரஜினி, கமல், விஜயகாந்த, சத்யராஜ். பிரபு, கார்த்திக், அர்ஜூன், சரத்குமார், ஜெயராம், முரளி என 90 களில் முன்னணியில் இருந்த ஹீரோக்களின் படங்களில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்.

குஷ்பு, அதிகமான படங்களில் நடித்தது பிரபுவுடன்தான். அவர்களது ஜோடிப் பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது, அவர்களது ஜோடி, பல படங்களுக்கு நல்ல வெற்றியை தந்தது, சின்னதம்பி படம் பிரபு, பி வாசு, குஷ்பு என மூன்று பேருக்குமே, சினிமா வாழ்வில் திருப்பு முனையாக பலத்த வெற்றியை கொடுத்தது. அந்த காலகட்டத்தில், சின்ன தம்பி குஷ்பு என்றே அவர் அழைக்கப்பட்டார்.

- Advertisement -

பிரபு, ஜெயராம் என சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட குஷ்பு, ஒரு கட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். முறைமாமன் என்ற சுந்தர் சி இயக்கிய படத்தில் குஷ்பு நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, பின் திருமணம் நடந்தது. அப்போது, நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை குஷ்பு.

நான் சுந்தர் சியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த போது, ஊட்டியில் அவர், கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தை டைரக்ட் செய்துகொண்டிருந்தார். நானும், ஊட்டியில் ஒரு மலையாள பட ஷூட்டிங்கில் இருந்தேன். நடிகர் கார்த்திக், நீண்ட காலமாக எனது மிக நெருங்கிய நண்பர். நான் அவரை அவரது நிஜப் பெயரில் முரளி என்றுதான் அழைப்பேன். என் குழந்தைகள் கூட அவரை முரளிப்பா என்றுதான் கூறுவர்.

- Advertisement -

என் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றால், அவர்தான் முதலில் வந்து நிற்பார். அதுபோல், அவருக்கு ஒரு பிரச்னை என்றால், நாங்களும் முதலில் நிற்போம்.
அதனால் அப்போது, கார்த்திக்கிடம் சென்று, நான் சுந்தர் சியை திருமணம் செய்துகொள்ள இருக்கிற விஷயத்தை சொன்னேன். அதற்கு சந்தோஷப்பட்ட அவர், சுந்தர்சியை தனியாக அழைத்துச் சென்று, குஷ்பு மிக நல்ல பெண். அவரை திருமணம் செய்துகொள்வது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு விஷயம். ஆனால், குஷ்புவை நீங்கள் ஏதேனும் ஹர்ட் செய்தால், நான்தான் உங்களிடம் முதலில் சண்டைக்கு வருவேன், என மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார்.

எங்கள் திருமணத்துக்கு வந்த கார்த்திக், திருமணம் முடிந்தவுடன் சென்றுவிட்டார். பிறகு, போனில் நான் அழைத்து பேசிய போது, அவர் அழுதுகொண்டே பேசினார். உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா, என்னால நம்பவே முடியலை, நான் பீலிங்குல இருக்கேன், போனை வை எனக் கூறிவிட்டார், என அந்தக் கால நினைவுகளை சுவாரசியமாக பகிர்ந்து இருக்கிறார் நடிகை குஷ்பு.

- Advertisement -

சற்று முன்