- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதிக்கே அப்படி ஒரு நிலமை என்றால் நமக்கு இந்த ரிஸ்க் தேவையா? கமிட் ஆனவரை கழட்டி...

தளபதிக்கே அப்படி ஒரு நிலமை என்றால் நமக்கு இந்த ரிஸ்க் தேவையா? கமிட் ஆனவரை கழட்டி விட்ட சர்தார் 2 படக்குழு – என்ன கொடும சார் இது?

- Advertisement -

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று நடிகர் வடிவேலு கிண்டலாக டயலாக் பேசியிருந்தாலும் அதை பொதுவான விஷயங்களில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சினிமாவில் அது சாத்தியமில்லை. ஏனெனில் நூற்றுக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்த பல நூறு பேர் சம்பந்தப்பட்ட வாழ்க்கையாக அது இருக்கிறது.

அதாவது ஒரு முறை தோல்வி கண்டால், தோல்வி கண்டவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள சினிமா உலகம் தயாராக இல்லை என்பதே இதற்கு சான்றாக இருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம் இதுவரை 355 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்று கூறப்பட்டாலும் இன்னும் பெரிய அளவில் இந்த படம் வசூலில் கடக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் இருந்தது. அது ஏமாற்றமாக மாறி உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய செய்த விஷயம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள்தான். விசில் போடு பாடல் வந்த போதும் ரசிகர்கள் மத்தியில் எந்த பரபரப்பும் ஏற்படவில்லை. சின்ன சின்ன கண்ணில் என்ற பாடலும் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. மூன்றாவது சிங்கிளாக வந்த நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு பாடலும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் வைப் ஏற்படுத்தவில்லை. 4வது பாடல் மட்ட மட்டுமே, சற்று கவனம் பெற்றதாக இருந்தது.

இதற்கிடையே இளையராஜா பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து யுவன் சங்கர் ராஜா தி கோட் படத்தில் வைத்திருந்தார். சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா என்ற பாடலும், பெரிய அளவில் ரசிகர்களை உற்சாகப்படுத்தவில்லை.

- Advertisement -

மொத்தத்தில் தி கோட் படத்தை பொருத்தவரை யுவன் சங்கர் ராஜா இசை படத்தின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் பிஜிஎம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. தி கோட் படத்தை பொறுத்தவரை விஜய் இரண்டு வேடங்களில் நடித்ததும் அதில் ஒருவர் வில்லன் கேரக்டரில் அசத்தியதும்தான் காரணமே தவிர இசை எந்த விதத்திலும் படத்துக்கு உதவவில்லை.

இந்த சூழ்நிலையில் யுவன் சங்கர் ராஜாவை சர்தார் 2 படத்தில் இசையமைக்க கமிட் செய்திருந்தனர். ஆனால் தி கோட் படத்தில் அவர் செய்த சொதப்பலை பார்த்துவிட்டு, தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்து இப்போது சர்தார் 2 படத்தில் இருந்து அவரை விலக்கிவிட்டு வேறு இசையமைப்பாளரை நியமிக்கலாம் என்ற முடிவில் சர்தார் 2 படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்