- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு, படத்தில் இளையராஜா செய்திருக்கும் தரமான...

விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு, படத்தில் இளையராஜா செய்திருக்கும் தரமான விஷயம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் வெளியான படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி, கதாநாயகனாக அறிமுகமான முதல் படம். இளையராஜா இசையில், எல்ரெட் குமார் தயாரிப்பில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பு ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெற்றது.

விடுதலை படம் தந்த மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாக பயணிக்க ஆரம்பித்த சூரிக்கு அடுத்த படம் கருடன் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் சொக்கன் என்ற கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தார். சசிக்குமாரும் இந்த படத்தில் நடித்திருந்தார், துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ஆனால் அடுத்து கூழாங்கல் பட இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். ஆனால் படம் அவ்வளவாக ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. கூழாங்கல் படம் போல கொட்டுக்காளி படம் பேசக்கூடிய படமாக அமையவில்லை.

விடுதலை படத்தில் நடித்த சூரி, அடுத்து 2 படங்களில் நடித்து அந்த படங்களும் வெளியான நிலையில், இன்னும் விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகவில்லை. ஒருவழியாக வருகிற டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக இந்த படம் ரிலீஸாகிறது.

- Advertisement -

இந்நிலையில் விடுதலை 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தேதி வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. அதற்கு முன்பாக வரும் 17ம் தேதி தினம் தினம் என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பாடலை இசைஞானி இளையராஜாவே எழுதி பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார் தோன்றும் இந்த பாடல் காட்சி 1960, 70, 80களில் நடக்கும் ஒரு பாடல் காட்சி போல உருவாக்கப்படுகிறது. இதற்காக சென்னையில் ஷெட்டுகள் அமைக்கப்பட்டு, தற்போது பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்குள் இந்த பாடலை எடுத்து முடித்துவிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இந்த பாடல் விடுதலை முதல் பாகத்தில் வந்த காட்டுமல்லி பாடல் போலவே, செமையாக வைரல் ஆகும் என்று பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்