- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகம், படத்தின் கதைக்களம் வில்லன் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகம், படத்தின் கதைக்களம் வில்லன் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர். அவர் 30 ஆண்டுகளில் இயக்கிய படங்களில் எண்ணிக்கை வெறும் 15 தான். அதில் 13 படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்கள். 2 படங்கள் மட்டுமே பிளாப் படங்களாக இருந்தன.

காதலன் ஜெண்டில்மேன் முதல்வன் அந்நியன் ஐ நண்பன் இந்தியன் எந்திரன் சிவாஜி 2.0 உள்பட 15 படங்களை தந்திருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படமும் கேம் சேஞ்சர் படமும்தான் ஷங்கர் படங்களில் படுமோசமான தோல்வியை சந்தித்த படங்களாக இருந்தன.

- Advertisement -

இப்போது மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படமாக உருவாக்கும் முயற்சிகளில் ஷங்கர் இருந்து வருகிறார். இந்த படம் பட்ஜெட் மட்டுமே ரூ. 1000 கோடியாக உள்ளது. இதில் ரஜினி கமல் போன்றவர்களும் நடிக்க வாய்ப்புள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஏற்கனவே படங்களில் நடித்து வருகிறார். விருமன் படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து மாவீரன் நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்திருந்தார். விளம்பர படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார்.

- Advertisement -

இப்போது ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கரும் நடிக்கிறார். இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிசெய்த அசோக் குமார் என்பவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் அர்ஜித் ஷங்கர் நடிக்க உள்ளார். இயக்குனர் அட்லி ஏற்கனவே ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக இந்தியில் பிரபல நடிகர் இயக்குனராக உள்ள நடிகர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இவர் மகாராஜா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இந்த படம் சென்னை 28 போல ஒரு ஜாலியான படமாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்