- Advertisement -
Homeபொழுதுபோக்குவீண்முயற்சி ஆகிறதா விடாமுயற்சி... அடுத்த பிரச்சினையாக... வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்...

வீண்முயற்சி ஆகிறதா விடாமுயற்சி… அடுத்த பிரச்சினையாக… வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்…

- Advertisement -

அஜித்தின் வலிமை திரைப்படத்திற்கு ஏற்பட்ட நிலைமைதான், இப்போது விடாமுயற்சிக்கும் ஆகியுள்ளது. அந்த படத்திலாவது ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி, கொரோனா கட்டுப்பாடால் அப்டேட் வராமல் இருந்தது. ஆனால், இந்த விடாமுயற்சியில் படத்திற்கான ஷூட்டிங் கூட இன்னும் ஆரம்பம் ஆகாததால் பரிதவித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ஆரம்பத்திலிருந்தே அஜித்தின் இந்த 62வது படத்திற்கு, தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. துணிவு திரைப்படத்திற்கு பிறகு, அஜித் படத்தை யார் இயக்க போகிறார் என கேள்வி எழுவதற்கு முன்பே, விக்னேஷ் சிவன் ப்ராஜெக்ட்டில் உள்ளே வந்ததால் ஆச்சரியப்பட்டனர் அஜித் ரசிகர்கள்.

- Advertisement -

அஜித்தை வைத்து அவர் எந்த மாதிரியான கதை களத்தில் எடுப்பார் என பலரும் மூளையை கசக்கி கொண்டிருக்க, திடீரென படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார். தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்ட பிரச்சினைதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனால் அஜித்தை அடுத்து இயக்கப் போவது யார் என கேள்வி எழ, அதில் விஷ்ணு வர்தன், அட்லி, சிறுத்தை சிவா, சுதா கொங்கரா என பலரது இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அஜித் 62-க்குள் நுழைந்தார் மகிழ் திருமேனி.

- Advertisement -

தடையற தாக்க, மீகாமன், தடம் என கிரைம் திரில்லர் படங்களுக்கு பெயர் போன மகிழ் திருமேனி அஜித்துடன் சேர்ந்ததால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அஜித் பிறந்தநாளன்று இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, விடாமுயற்சி என டைட்டிலும் வைக்கப்பட்டது. ஆனால் தலைப்பு பெரிதாக ஈர்க்கவில்லை என்றும், இந்த படத்திலும் வி சென்டிமெண்ட்தானா எனவும் முகம் சுழித்து கொண்டனர் ஏ.கே. ரசிகர்கள்.

இது ஒருபக்கமிருக்க அஜித், பைக்கை எடுத்து கொண்டு வெளிநாட்டிற்கு பறந்ததால் விடாமுயற்சி குறித்த எந்தவொரு அப்டேட்டும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகவில்லை. மேலும், படத்திற்கான கால்ஷீட்டையே அஜித் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டதால், விடாமுயற்சி ப்ராஜெக்ட் கைவிடப்படுவதாக சினிமா விமர்சகர்கள் கூறினர். இந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி, விடாமுயற்சியின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் லைகா நிறுவனம் படத்திலிருந்து விலகி, வேறொரு தயாரிப்பு நிறுவனம் விடா முயற்சியை எடுப்பதாக தெரிகிறது. இந்த தகவலால் ஏ.கே. ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்