- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது மட்டும் இல்லைன்னா சினிமாவுல ஏமாத்திடுவாங்க- கமல்ஹாசன் அப்படி நடந்துகொண்டதுக்கு இதுதான் காரணமா?

இது மட்டும் இல்லைன்னா சினிமாவுல ஏமாத்திடுவாங்க- கமல்ஹாசன் அப்படி நடந்துகொண்டதுக்கு இதுதான் காரணமா?

- Advertisement -

கமல்ஹாசனின் திறமைகள் குறித்து அறியாத சினிமா ரசிகர்களே கிடையாது. இந்திய சினிமாவில் அவர் செய்யாத சாதனைகளே கிடையாது. பல புதிய தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். அதே போல் இந்திய சினிமாவில் நடிப்புக்கு என்றே ஒரு பல்கலைக்கழகமாக நடமாடி வருபவரும் இவரே.

இப்போதிருக்கும் பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக நடிப்பு என்ற கலைக்கு உதாரணமாக இருப்பவர் கமல்ஹாசன்தான். சிவாஜியின் திரையுலக வாரிசு என்றே பலரும் அவரை கூறுவார்கள்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கமல்ஹாசன் செய்யும் மெனக்கெடல்களை பார்த்தால் பூரித்துப்போய்விடும். அந்தளவுக்கு சினிமாவிற்காக உயிரையே பணயம் வைத்து நடிக்க கூடியவர் இவர். சினிமாவின் மீது அந்தளவுக்கு காதல் கொண்டிருக்கும் கலைஞன் இவர்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை கமல்ஹாசனின் நடிப்பு வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிடு. அதே போல் ஒரு படத்தில் பல கெட்டப்களில் அசால்ட்டாக நடிக்கும் கமல்ஹாசன், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இடையே பல வித்தியாசங்களை காட்டுவார். இவ்வாறு கமல்ஹாசனின் புகழை குறித்து கூற வேண்டும் என்றால் ஒரு நாள் பத்தாது.

இவ்வாறு மிகப் பெரிய திறமையையும் புகழையும் பெற்ற கமல்ஹாசனிடம் ஒரு கலைஞனுக்கே உண்டான கர்வம் இருப்பது என்பது இயற்கையான விஷயமே. பலரும் கமல்ஹாசன் மிகவும் கர்வமாக நடந்துகொள்வார் என்று விமர்சனங்களை முன் வைப்பதும் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, கமல்ஹாசன் குறித்த ஒரு சுவார்ஸ்ய தகவலை கூறியுள்ளார்.

அதாவது ஒரு முறை செய்யாறு பாலு கமல்ஹாசனை நேர்காணல் எடுக்க சென்றிருந்தாராம். அப்போது கமல்ஹாசன் மிகவும் கர்வமாக அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தாராம். அவர் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்த செய்யாறு பாலுவுக்கு சற்று பயம் வந்துவிட்டதாம். அதன் பின் கமல்ஹாசன், “என்னை பார்த்தால் கர்வமாக இருப்பது போல் தோன்றுகிறது அல்லவா? இந்த கர்வம்தான் என்னுடைய கவசம். இந்த கர்வம் இல்லை என்றால் சினிமாவில் மிக எளிதாக ஏமாற்றிவிடுவார்கள். எங்கே கர்வப்பட வேண்டுமோ அங்கே கர்வப்பட வேண்டும். எங்கே சாந்தப்பட வேண்டுமோ அங்கே சாந்தப்பட வேண்டும்” என்று கூறினாராம்.

சற்று முன்