- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஸ்லிம் ஆக இருக்க இப்படி ஒரு காரணமா, அதுதான் விஜய் எப்பவுமே ஸ்மார்ட்டா இருக்காரோ

விஜய் ஸ்லிம் ஆக இருக்க இப்படி ஒரு காரணமா, அதுதான் விஜய் எப்பவுமே ஸ்மார்ட்டா இருக்காரோ

- Advertisement -

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது எப்போதும் உடல் ஆரோக்கியத்துக்கு குறியீடாக சொல்லப்படுகிற அற்புதமான பழமொழி. அதுவும் சினிமா கலைஞர்களுக்கு உடல் ஆரோக்கியம் என்பது மிக அவசியமானது. ஏனெனில், அவர்கள் ஆரோக்கியமாக எப்போதும் இருந்தால் மட்டுமே, கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்படும் சினிமாவில், சொன்ன நேரத்தில் நடிக்க முடியும். அவருக்கு பின்னால், ஆயிரமாயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கையும் இதில் அடங்கி இருக்கிறது.

அதனால் தான் அந்த காலத்தில் எம்ஜிஆர் உடல் நலனில், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டினார். அசைவ பிரியரான அவர் தினமும் அவர் அசைவ உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலும், 60 வயதுகளை கடந்தும் ஸ்மார்ட் ஆக காட்சியளித்தார். தினமும் உடற்பயிற்சி செய்ததே அதற்கு காரணம். தமிழ் சினிமாவில், என்றும் மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் சிவக்குமார், இன்றும் முதுமை தோற்றமின்றி துள்ளலாக இருக்க அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, தியானம், யோகாசன பயிற்சிகளே காரணம்.

- Advertisement -

இப்போதும் கவிஞர் வைரமுத்து, காலை நேரத்தில் ஒரு மணி நேரம் கடற்கரை மணலில் நடக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் 73 வயதாகியும் ஜெயிலர் படத்தில், அவ்வளவு மாஸ் காட்டி நடிக்க காரணம், அவரது உடல் ஆரோக்கியமும், கட்டுப்பாடான வுாழ்க்கை முறைகளும்தான். உணவு கட்டுப்பாடு, சரியான தூக்கம், உடற்பயிற்சி, தியானம் என பலவிதங்களில் தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே, வயது என்பது எண்ணிக்கையாக மட்டுமே இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.

அந்த வகையில், நடிகர் விஜய் எப்போதும் ஒரே மாதிரியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கடந்த 1974ம் ஆண்டில் பிறந்த விஜய்க்கு இப்போது வயது, 49 ஆகிறது. இன்னும் ஓராண்டில் வயதில் ஆப் செஞ்சுரி அடிக்க போகிறார். எனினும் இன்னும் 25 வயது இளைஞன் போலவே தோற்றமளிக்கிறார். அவர் நடிக்கும் படங்களில் அவ்வளவு சுறுசுறுப்பு காட்டுகிறார். நடனம், சண்டை காட்சிகளில் அமர்க்கப்படுத்துகிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் இப்படி, பல ஆண்டுகளாக ஸ்லிம் ஆன தோற்றத்தில், ஸ்மார்ட் ஆக இருக்க காரணம், அவரது உணவு பழக்கம்தான். குறிப்பாக அவர், இரவு 7 மணிக்கு பிறகு டின்னர் சாப்பிடுவதில்லை. இரவு 7 மணிக்கு தனது இரவு உணவை முடித்துக்கொண்ட பின், சில மணி நேரம் கழித்து காபி அல்லது டீ சாப்பிடுவாராம். ஆனால், இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிடும் இந்த உணவு பழக்கத்தை நீண்டகாலமாக பின்பற்றி வருகிறார்.

சில நடிகர்கள் தேவைப்பட்டால் உடல் எடையை அதிகரித்து, பின் குறைப்பது உண்டு. அதுவும் சினிமாவில் அவர்கள் ஏற்று நடக்கும் கேரக்டர்களுக்காகவும் அது நடப்பதுண்டு. கமல், சியான் விக்ரம் போன்றவர்கள் அப்படி அடிக்கடி எடை அதிகரித்து, குறைப்பவர்கள் தான். ஆனால், எப்போதுமே ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில், காட்சியளிப்பது விஜய் மட்டும்தான். விஜயை பல விஷயங்களில் பின்பற்றும் அவரது ரசிகர்கள், இந்த உணவு விஷயத்தில் கூட உடல் ஆரோக்கியம் கருதி, அவரை பின்பற்ற முன்வரலாம்.

- Advertisement -

சற்று முன்