நடிகர் ரஜினிகாந்த் சில படங்களில் துணை நடிகராக நடித்து பிறகு கமலுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர். வில்லனாகவும் சில படங்களில் நடித்து ஒரு கட்டத்துக்கு பிறகு நாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். பிறகு ரஜினிக்கு போட்டி கமல், கமலுக்கு போட்டி ரஜினி என்ற நிலை உருவாகி தமிழ் சினிமாவில் இருவரும் சக்கைப் போடு போட்டனர்.
ரஜினியை பொருத்தவரை எவ்வளவு உச்சத்தை தொட்டாலும் அவரது நிதானம், எளிமை, பக்குவம் என்ற நிலையில் இருந்து அவர் மாறுவது இல்லை. அதனால் தன்னை போல் திறமையிருந்தும் உயர நினைப்பவர்களுக்கு அவர் தானாக முன்வந்து உதவுகிறார். ஆனால் அது வெளியே தெரிவது இல்லை.
இன்று தமிழ் சினிமானில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் தன் பயணத்தை துவங்கிய இவர், இன்று தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். பல கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்கு தானம் தர்மங்களை செய்துகிறார். விவசாயிகளுக்கு உதவுகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து டான்ஸ் மாஸ்டர் நடிகர் ராகவா லாரன்ஸ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளனாக இருந்த நான், நன்றாக டான்ஸ் ஆடுவதை பார்த்த ரஜினி, டான்ஸ் யூனியனில் சேர்த்துக்கொள்ள லெட்டர் கொடுத்து விட்டார்.
பிறகு அண்ணாமலை படப்பிடிப்பில் இருந்த டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவிடம், நான் கஷ்டப்படற ஒரு பையனை சேர்த்துக்கொள்ள யூனியனுக்கு லெட்டர் கொடுத்திருக்கிறேன். நீங்களும் அந்த பையனை சேர்த்துக்குங்க என்று கூறியிருக்கிறார். மறுநாள் எனக்கு பிரபுதேவா வீட்டில் இருந்து போன் வந்தது. அவர் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான பேர் அவரை பார்க்க காத்திருக்கின்றனர். ஆனால் என்னை அவர்களே அழைத்தனர்.
அங்கே நான் போன போது, ரஜினி சார் உங்களுக்கு ரொம்ப க்ளோஸா என்று என்னை பிரபுதேவா கேட்டார். இல்லே சார், நான் அவருடைய ரசிகன். அவர் முன்னாடி ஆடி காமிச்சேன் என்றேன். உன்னை பத்தி ரொம்ப நல்லவிதமா சொன்னார் அவர். அடுத்த பாட்டுக்கு என்னுடன் நீங்க வந்துடுங்க என்றார். அன்றுமுதல் என் பயணம் ஆரம்பமானது என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.





