- Advertisement -
Homeபொழுதுபோக்குதிட்டமிட்ட தேதிக்கு 10 நாட்கள் முன்னதாகவே ரிலீஸாகிறது விஜய் படம், அதுக்கு இப்படி ஒரு காரணமா?

திட்டமிட்ட தேதிக்கு 10 நாட்கள் முன்னதாகவே ரிலீஸாகிறது விஜய் படம், அதுக்கு இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த படங்கள் பெரும்பாலும் தெலுங்கு படங்களின் ரீமேக் ஆக தான் இருக்கும். தெலுங்கில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி. இந்த படம்தான் விஜய் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அவரை கமர்ஷியல் ஹீரோவாக உருவாக்கியது.

துவக்கத்தில் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, லவ்டுடே. பிரியமுடன், நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும் என காதல் ஜானரில் பயணித்த விஜய் படங்களை மடை மாற்றி விட்டதே இந்த கில்லி படம்தான். அதற்கு பிறகுதான் ஆதி, போக்கிரி, குருவி, ஜில்லா என அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக விஜய் மாறினார்.

- Advertisement -

விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படம்தான், அவரது உச்சக்கட்ட ஆக்சன் படமாக இருக்கிறது. இதுவரை 50 பேர் வரை மட்டுமே சண்டை காட்சிகளில் அடித்து வீழ்த்திக்கொண்டிருந்த விஜய், லியோ படம் கிளைமேக்ஸ்சில் 300 பேர் வரை அடிக்கிறார். கோட் படத்தில் பல ஆயிரம் பேரை அடித்து வீழ்த்தும் காட்சி வந்தாலும் விஜய் ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டரில் பறக்கும்.

அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் தன்னிலை மறந்த ஒரு நிலையில் இருக்கின்றனர். அதனால்தான் கடந்தமுறை ரோகிணி தியேட்டரில் டிரெய்லர் பார்க்க வந்து தியேட்டரை அடித்த நொறுக்கி சேதப்படுத்தி, தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளன்று கோட் படத்தை அதாவது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்து இருந்தது. இப்போது ஜூன் 17ம் தேதி பக்ரீத் வருவதால், கோட் படத்தை ஜூன் 13ம் தேதியே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

அதாவது சனி, ஞாயிறு, பக்ரீத் பண்டிகை என வருவதால், அத்துடன் 22ல் விஜய் பிறந்தநாளும் வருவதால் தொடர்ந்து விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஜூன் 13ல் கோட் படம் திரைக்கு வருகிறது. இந்த படம் ஜெமினிமேன் என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்