- Advertisement -
Homeபொழுதுபோக்குஅருணாசலம் படத்தில் இப்போ ஹீரோ என்றால் யார் நடிக்கணும் - இயக்குனர் சுந்தர் சி சொன்னதை...

அருணாசலம் படத்தில் இப்போ ஹீரோ என்றால் யார் நடிக்கணும் – இயக்குனர் சுந்தர் சி சொன்னதை கேட்டு அப்செட் ஆன ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று அருணாசலம். கடந்த 1997ம் ஆண்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.

ரஜினிகாந்த் சௌந்தர்யா ஜெய்சங்கர் மனோரமா ரவிச்சந்திரன் வடிவுக்கரசி ஜனகராஜ் ரம்பா கிட்டி விசு ரகுவரன் கிட்டி விகே ராமசாமி நிழல்கள்ரவி செந்தில் வினு சக்ரவர்த்தி பொன்னம்பலம் ராஜா என பலர் நடித்திருந்தனர். படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக இருந்தன. 3000 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான வேதாசலம் (ரஜினி) மகன் ரஜினிகாந்த், அதற்காக 30 நாளில் 30 கோடி ரூபாயை செலவு செய்ய வேண்டும். ஆனால் அந்த பணத்தில் வாங்கிய எதுவும் இறுதியில் அவரிடம் இருக்க கூடாது என்ற நிபந்தனையுடன் அதை செலவு செய்ய வேண்டும்.

வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சுந்தர் சியிடம் நீங்கள் இயக்கிய 4 படங்களில் இப்போது எந்த ஹீரோக்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் வெளிப்படையாக சில நடிகர்களின் பெயர்களின் குறிப்பிட்டுச் சொன்னார்.

- Advertisement -

அன்பே சிவம் படம் குறித்து கேட்ட போது அதில் கமல்ஹாசன் மாதவன் கேரக்டரில் இப்போது விஜய் சேதுபதியும் அசோக் செல்வனும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். உள்ளத்தை அள்ளித்தா படம் குறித்து கேட்ட போது அதில் கார்த்திக் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்தால் மிக சிறப்பாக என்றும் கூறினார்.

அடுத்து மேட்டுக்குடி படத்தில் கார்த்திக் நடித்த கேரக்டரில் இப்போது நடிக்க சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி சரியாக இருப்பார் என்று சுந்தர் சி கூறினார். அடுத்து அருணாசலம் படம் குறித்து கேட்ட போது, அதற்கு ரஜினி சார் கேரக்டரில் நடிக்க சரியான நபர் விஜய்தான். அப்போது ரஜினி. இப்போது விஜய். அவரை விட்டால் வேற ஆப்ஷனே இல்லை என்றும் சுந்தர் சி வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்