- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் நெருக்கடி இல்லாத ஆட்சி கொடுக்க, அந்த கட்சி வெளியில் இருந்து ஆதரவு தர...

நடிகர் விஜய் நெருக்கடி இல்லாத ஆட்சி கொடுக்க, அந்த கட்சி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் – இயக்குனர் பேரரசு கோரிக்கை!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். மொத்தம் 233 தொகுதிகளில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அவரது கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தவெக கட்சி ஆட்சியமைத்து கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆனால் மொத்தம் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக பதவியேற்க முடியும் என்கிற நிலையில் நடிகர் விஜய்க்கு இன்னும் 11 தொகுதிகளின் ஆதரவு தேவையாக உள்ளது.

- Advertisement -

ஏனெனில் நடிகர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால் அதில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி சிவகாசி படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. நடிகர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக பேசிய வரும் பேரரசு, இப்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் விஜய் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த நேரத்தில் அவர் ஆட்சியமைக்க கூடுதலாக 11 சீட்டுகள் தேவைப்படுகிறது.

- Advertisement -

விஜய் ஆரம்பத்தில் இருந்தே எனக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்லி தான் அரசியல் களத்தில் இறங்கினார். அதனால் திமுகவிடம் சென்று ஆதரவு கேட்பது சரிபட்டு வராது. கேட்கவும் கூடாது. சின்ன சின்ன கட்சிகளிடம் கேட்கலாம். ஆனால் அதை விட அதிக சீட்டுகளை பெற்றுள்ள அதிமுக விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம்.

அப்படி செய்தால் நெருக்கடி இல்லாத அரசாக விஜய் மக்களுக்கு நல்லாட்சி தர முடியும். நல்லபடியாக ஒரு குழப்பம் இல்லாத அரசை அமைத்து விஜய் ஆட்சி செய்வார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அப்படி மக்கள்தான் விஜயை முதல்வர் ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். அதற்காக அதிமுக வெளியில் இருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தால் நன்றாக இருக்கும். இதனால் மக்களுக்கும் அதிமுக மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும் என்று இயக்குனர் பேரரசு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்