எம்ஜிஆர் சிவாஜி போல ரஜினி கமல் போல விஜய் அஜீத்குமார் இருவரும் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தனர். அவர்களுக்குள் அந்த போட்டி இருந்ததோ இல்லையோ ஆனால் அவர்களது ரசிகர்கள் கடும் போட்டியாக கருதினர். இதனால் விஜய்க்கு எதிராக அஜீத் ரசிகர்களும் அஜீத்துக்கு எதிராக விஜய் ரசிகர்களும் எப்போதுமே கொடி பிடிப்பதுண்டு.
ஆனால் விஜய் அஜீத்குமாரை பொருத்த வரை இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரை எந்த இடத்திலும் விமர்சித்து பேசியது இல்லை. நண்பர் விஜய் என்றுதான் அஜீத்குமாரும் சொல்வார். நண்பர் அஜீத்குமார் என்றுதான் விஜயும் சொல்வார். மேலும் அஜீத்குமாரின் மனைவி ஷாலினிக்கும் விஜய்க்கும் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த போது ஏற்பட்ட நட்பு இன்றும் தொடர்கிறது.
தனிப்பட்ட முறையில் அவர்களுக்குள் இப்படி ஒரு புனிதமான நட்பு நீடிக்கிற நிலையில் விஜய்க்கு போட்டியாளராக அஜீத்குமார் எப்போதும் தன்னை கருதியது இல்லை. அப்படி இருந்தால் விஜய் அரசியலுக்கு வந்தவுடன் விஜய் இடத்தை பிடிக்க அஜீத்குமார் கடும் முயற்சி செய்திருப்பார். ஆனால் அவர் பாட்டுக்கு ஆண்டுக்கணக்கில் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படம் ஏகே 64. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒரு சீனியர் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர் கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த நடிகர் சமீபகாலமாக அரசியல் களத்தில் உள்ள நடிகர் விஜய் குறித்து தாறுமாறாக விமர்சித்து விஜயை மட்டம் தட்டி பேசி வருகிறார்.
இதையறிந்த நடிகர் அஜீத்குமார் உடனடியாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறி அந்த நடிகரை தன்னுடைய ஏகே 64 படத்தில் இருந்தே தூக்கி விட்டார். விஜய் குறித்து மட்டமாக பேசினால் ஏகே சந்தோஷப்படாமல் இப்படி தன்னை படத்தில் இருந்து கழட்டி விட்டுட்டாரே என்று அந்த சீனியர் நடிகரும் இப்போது அப்செட்டாகி உள்ளார்.
என்னுடைய நண்பர் விஜயை இழிவாக பேசும் அந்த நடிகரை என் படத்தில் நடிக்க வைத்தால் எனக்குத்தானே கெட்டப் பெயர் என்று அந்த சீனியர் நடிகரை வெளியேற்றி இருக்கிறார் நடிகர் அஜீத்குமார். அந்த சீனியர் நடிகர் வேறு யாருமல்ல, மேடை ஏறினால் என்னம்மா கண்ணு டயலாக் பேசி நக்கலும் லொள்ளும் கலந்து பேசுவாரே அவர்தான் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டங்களில் தான் அவர் விஜய் குறித்து தவறாக விமர்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





