- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி காட்டி கொடுத்திட்டியே பங்கு, அஜீத் ஆரவ் கார் விபத்து காட்சி வைரல், அப்போ இதுவும்...

இப்படி காட்டி கொடுத்திட்டியே பங்கு, அஜீத் ஆரவ் கார் விபத்து காட்சி வைரல், அப்போ இதுவும் அதுதானா? – சுரேஷ் சந்திராவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் 6 மாதங்களாக நடித்து வருகிறார். அஜர்பைஜானில் இந்த படப்பிடிப்பு காட்சிகள் நடந்த வகையில், தொடர்ந்து பனிப்புயல், கனமழை, குளிர், மணல் காற்று என பலவித இயற்கை சீற்றங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தடைபட்டது.

இதற்கிடையே விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்சன் நிறுவனத்துக்கும், வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதில் சிக்கல் ஏற்பட்டதால் படப்பிடிப்பை கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைத்தனர். இப்போது ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தையும் லைகா புரடக்சன் தயாரிப்பதால், இந்த படத்தை முடித்த பின், விடாமுயற்சி ஷூட்டிங் துவங்க திட்டமிட்டிருந்தது.

- Advertisement -

அந்த வகையில், வரும் 10ம் தேதி மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கி, மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இது அஜீத் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்த நிலையில், திடீரென நேற்று, நடிகர் அஜீத்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு விபத்து வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில் அஜீத்குமார் ஜீப்பை ஓட்ட, அருகில் கழுத்தில் கட்டுப் போட்ட நிலையில், ஆரவ் அமர்ந்திருக்கிறார். அடுத்த சில விநாடிகளில் வேகமாக சென்ற அந்த ஜீப் கவிழ்ந்துவிடுகிறது. இது விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது நடந்த உண்மை சம்பவம் என்றும், இதுபோன்ற ரிஸ்க் ஆன காட்சியில் அஜீத்குமார் உயிரை பணையம் வைத்து நடித்திருந்தார் என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

ஆனால் அந்த விபத்து காட்சியை பார்த்த வைத்து, இது ஏற்கனவே வந்த ஹாலிவுட் படத்தின் கதை. 1997ம் ஆண்டில் கர்ட் ரசல் நடித்த படம் பிரேக் டவுன். இந்த படத்தில் ஹீரோயினும், ஹீரோவும் சென்ற கார் பிரேக் டவுன் ஆகி விடும். அப்போது காணாமல் போன காதலியை தேடும் கதைதான் இது. ஆரவ்வை அஜீத் கட்டிவைத்து, காரில் அழைத்துச் செல்வது போன்ற அதே காட்சி, அந்த ஹாலிவுட் படத்திலும் உள்ளது என்பதை, அந்த காட்சியை பதிவிட்டு, நெட்டிசன்கள் உறுதிபடுத்தி உள்ளனர்.

அஜீத்குமார் கார் ஓட்டும் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்தார் என்று பெருமைக்காக, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வீடியோ எடுத்து போட, அது இப்போது அந்த படத்தின் கதையை லீக் செய்துவிட்டது. இப்படி காட்டி கொடுத்துட்டியே பங்கு, ஹாலிவுட் சரக்கை வெச்சே ஓட்டறீங்களே, சொந்த சரக்கே டைரக்டர்களிடம் இல்லையா என, நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்