- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் சொன்ன கதையை கேட்டு அசந்து போன விஜய் - அரசியலுக்கு வராவிட்டால் இந்த படத்தில்...

வெற்றிமாறன் சொன்ன கதையை கேட்டு அசந்து போன விஜய் – அரசியலுக்கு வராவிட்டால் இந்த படத்தில் நடிப்பது உறுதி – ஹெவி ஸ்டோரியாக இருக்குதே பாஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் காலமாக அன்றொரு காலம் இருந்தது. இப்போதும் அப்படி ஒரு காலம் இருக்கிறது. பாலு மகேந்திரா, பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா படங்கள் என்றாலே, அவர்களின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்றாலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் அவர்களது திரைக்களமும், கதைபாத்திரங்களும் வேற லெவலில் இருந்தது.

அதே போல் இன்றைய காலகட்டத்தில் மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறும் பிறமொழிகளை சேர்ந்த நடிகர், நடிகையர் அதிகமாக உள்ளனர். இப்போது அந்த வரிசையில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக இருப்பவர் வெற்றிமாறன். அவரது திரைக்கதையில், இயக்கத்தில் நடிக்க அனைவருமே ஆர்வமும், விருப்பமும் காட்டுகின்றனர்.

- Advertisement -

ஆனால் ஒரு படைப்பாளியாக, கதைக்கான கேரக்டர்களில் நடிக்க வேண்டிய கலைஞர்களை மட்டுமே அவர் வெற்றிமாறன் தேர்வு செய்கிறார். அந்த வகையில், வாடிவாசல் படத்துக்கு பிறகு அஜீத் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு கமர்ஷியல் நடிகரை, ஒரு கதையின் நாயகனாக அவர் உருவாக்குவது வெற்றிமாறனுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்க்கு ஒரு கதையை, வெற்றிமாறன் கூறியதாகவும், அந்த கதையை கேட்டு அசந்துபோன விஜய், கண்டிப்பாக இந்த படத்தை நாம் செய்கிறோம். ஆனால், கொஞ்சம் பொறுத்திடுங்கள். கதை ரொம்ப ஹெவியாக இருப்பதால், பொறுமையாக செய்வோம் என்று கூறியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம், இது அரசியல் கதையை பின்னணியாக கொண்டிருக்கிறது.

- Advertisement -

அதாவது ஒரு நாவலின் கதை இது. டெல்லிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்கள் தற்கொலைக்கு காரணம் தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். ஒரு கட்டத்தில், விவசாயி அண்ணன் இறந்து போக, அவரது குடும்பம், அண்ணிக்காக நிவாரணம் பெறுவதற்காக டெல்லிக்கு தம்பி வருகிறார்.

அப்போது இந்த விவசாயிகளின் தற்கொலை எல்லாம் தற்கொலை அல்ல. திட்டமிட்ட கொலை என்பதும், அதற்கு பின்னணியில் மத்திய அமைச்சர்
ஒருவர் இருப்பதும் அந்த தம்பிக்கு தெரிய வருகிறது. இதை பின்புலமாக கொண்ட படமான இதில் நடிக்க விஜய் அதிக ஆர்வமாக இருக்கிறார். 2026ல், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், இந்த படத்தை விஜய் ஹோல்டில் வைத்திருக்கிறார் என்று, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்