தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு என முக்கிய விசேஷ நாட்களில் ரஜினியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன், அந்த நாட்களில அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விடுகின்றனர்.
அந்த நாட்களில் ரஜினி சில மணி நேரங்கள் கழித்து ரஜினி, ரசிகர்களை சந்திக்க வருவார். சில நேரங்களில் கேட்டை திறந்து வௌியே வந்து நின்று வாழ்த்துகள் சொல்வார். மற்றநாட்களில் காம்பவுண்ட் சுவருக்கு பின்னால், பெஞ்ச் மீது ஏறிநின்று ரசிகர்களுக்கு காட்சி தருவார்.
ஆனால் கடந்த தீபாவளி பண்டிகையன்று இதுபோல் ரசிகர்களுக்கு அவர் வெளியில் வந்து காட்சி தரவில்லை. மணிக்கணக்கில் வீட்டின் முன் காத்திருந்து தலைவா வா, சிவனே வா, ஜெயிலரே வா என ஆர்ப்பாட்டம் செய்தும் ரஜினி வெளியே எட்டிப் பார்க்கவில்லை.
அதே போல் இன்றும் தைப்பொங்கல் திருநாளில் ரஜினியை சந்திக்கும் ஆசையில் போயஸ்கார்டன் வீட்டின் முன் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூட்டம் திரண்டது. கையில் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி, தலைவா, தலைவா என கூச்சலிட்டும் ரஜினி வெளியே வரவில்லை.
இந்நிலையில், ரஜினியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர், வெளியே வந்து ரோட்டில் நின்று ரசிகர்களை பார்த்து சத்தமிடுகிறார். பண்டிகை வந்துட்டா போதும், வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னுக்கிட்டு தலைவா, தலைவான்னு ஏன்னு கத்தறீங்க, அக்கம்பக்கத்துல யாரும் குடியிருக்க வேணாமா என்று ஆவேசமாக பேசுகிறார்.
https://www.facebook.com/polimernews/posts/pfbid022RJeho3ujRaGwHAUi38c21r4LstjtpYPJrpTYEKLJvCP6Cr4eXexNiZpG42PFfXLl
மேலும், அங்கிருந்த ரஜினி வீட்டு ஊழியர்களிடம், கேட்ட திறந்து விட்டு எல்லோரையும் விடுங்க, தலைவர் வீட்டை பார்த்துட்டு போகட்டும். என் வீட்டுல சாமி கும்பிட முடியல, பூஜை பண்ண முடியல, என ஆவேசமாக அங்கிருப்பவர்களிடம் சத்தமிடுகிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





