- Advertisement -
Homeபொழுதுபோக்கு38 ஆண்டு கால பகையை மறந்து, கூலி படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க சம்மதித்த சத்யராஜ் -...

38 ஆண்டு கால பகையை மறந்து, கூலி படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க சம்மதித்த சத்யராஜ் – அந்த விஷயத்தில் அவரை தட்டி தூக்கிய லோகேஷ் கனகராஜ்

- Advertisement -

நடிகர் சத்யராஜ், தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு கலைஞனாக தன்னை நிரூபித்து கொண்டிருப்பவர். இப்போதும் தொடர்ந்து பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம், அவர் பாகுபலி படத்தில் ஏற்று நடித்த கட்டப்பா கேரக்டர்தான். பான் இந்தியா மூவியான பாகுபலியில் கட்டப்பா வாக நடித்து, சகல தரப்பு ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்து விட்டார் சத்யராஜ். அதுதவிர வெப் சீரிஸ்களிலும் சத்யராஜ் நடிப்பது, பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு, அவருக்கு நல்ல வரவேற்பை தந்து வருகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் வில்லனாக நடித்து, மணிவண்ணன் இயக்கிய 24 மணி நேரம், 100வது நாள் படங்களில் ரசிகர்களை மிரட்டியவர் சத்யராஜ். பிறகு பாரதிராஜா, அவரை கடலோர கவிதைகள் படம் மூலம் கதாநாயகனாக மாற்றினார். பிறகு வேதம் புதிது, திருமதி பழனிசாமி, நடிகன், பிரம்மா, வாழ்க்கை சக்கரம் போன்ற படங்கள் சத்யராஜூக்கு முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்தை தொடர்ந்து 4வது இடத்தில் ஹீரோவாக அசத்தியவர் சத்யராஜ், ஆனால் ஒரு கட்டத்தில் முதுமை காரணமாக, கதாநாயகன் வேடங்களை தவிர்த்து, குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார் சத்யராஜ். அப்பா, அண்ணன், போலீஸ் அதிகாரி, டாக்டர் வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ், இப்போது சில படங்களில் மீண்டும் வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த 38 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1986ல் ரஜினிகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்த மிஸ்டர் பாரத் வெளியானது. இதில் சத்யராஜ் நடித்த காட்சிகளை ரஜினிகாந்த் குறைக்கச் சொன்னதாக ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டதால், அதில் இருந்து ரஜினி படங்களில் நடிக்க மறுத்தார் சத்யராஜ். மேலும், கர்நாடகா காவிரி நீர் பிரச்னையில், ரஜினி மேடையில் இருக்கும்போதே, அவரை மறைமுகமாக சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார் சத்யராஜ்.

இந்த நிலையில், பல இயக்குனர்கள் ரஜினியுடன் சத்யராஜை இணைந்து நடிக்க வைக்க பலமுறை முயற்சித்தனர். ஆனால் சத்யராஜ் சம்மதிக்கவில்லை. ஏனெனில் ரஜினி, சத்யராஜ் நிஜ சண்டையை போல, சினிமாவிலும் சத்யராஜை ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமிட் செய்தனர். தொழில் ரீதியாக சினிமாவில் ரஜினியை எதிர்க்க சத்யராஜ் விரும்பவில்லை. ஆனால் கூலி படத்தில், சத்யராஜூக்கு நெகட்டிவ் ரோல் இல்லை. இதில் ரஜினிக்கு அவர் நெருங்கிய நண்பராகவே நடிக்கிறார். இந்த ஒரு காரணத்துக்காகவே, கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க சத்யராஜ் மனப்பூர்வமாக சம்மதித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தில் சத்யராஜை வசப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

சற்று முன்