நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் தக்லைஃப். மணிரத்னம் கமல் இருவரும் 1987ம் ஆண்டில் வெளியான நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து தக்லைஃப் படத்தில் இணைந்து பணியாற்றினர். அதனால் தக்லைஃப் படம் வேற லெவலில் இருக்கும் என தமிழ் சினிமா ரசிகர்கள் கனவு கண்டனர்.
நாயகன் படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது. அதே போல் தக்லைஃப் படத்திலும் கமலுக்கு தேசிய விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்தது. நிச்சயமாக தமிழ் சினிமாவில் ஒரு பேசக்கூடிய சிறந்த படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர்.
நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கிய தக்லைஃப் படத்தில் கமலுடன் சிம்பு முதன்முறையாக இணைந்து நடித்திருந்தார். மேலும் திரிஷா அபிராமி நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் என பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.
மேலும் வழக்கம் போல மணிரத்னம் படம் என்றாலே இசை ஏஆர் ரகுமான் தான் என்பது தக்லைஃப் படத்திலும் தொடர்ந்தது. ஆனால் பலவிதமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக்லைஃப் படம் கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 கங்குவா படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து மிகச் சிறந்த பிளாப் படமாக தோல்வியடைந்தது. அதிலும் மணிரத்னம் இயக்கம், திரைக்கதை, திரிஷா கேரக்டரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
கடந்த 5ம் தேதி வெளியான தக்லைஃப் படம் முதல் நாளில் ரூ. 17 கோடி 2வது நாளில் ரூ. 7.15 கோடி 3வது நாளில் ரூ. 7.75 கோடி 4வது நாளில் ரூ. 6.5 கோடி 5வது நாளில் ரூ. 2.3 கோடி 6வது நாளில் ரூ. 1.8 கோடி 7வது நாளில் ரூ. 1.22 கோடி 8வது நாளில் 1.15 கோடி என இதுவரை 8 நாட்களில் தக்லைஃப் படம் மொத்தமாக 43.39 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தக்லைஃப் படம் ரிலீஸாகி 8 நாட்களில் இதுவரை 43.39 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. தக்லைஃப் படம் 50 கோடி ரூபாய் வசூலை எட்டுவதே திண்டாட்டமாக மாறி வருகிறது. இப்படி ஒரு மோசமான நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனமும் 8 வாரங்களுக்கு பிறகு இல்லாமல் இப்போதே தக்லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்குமாறு கமலுக்கு பலத்த நெருக்கடியை தந்துள்ளது.





