- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் திரைப்படத்தின் கதை இதுதானா... என்னங்க இது அந்த படம் மாதிரிலா இருக்குது... இது...

தக் லைப் திரைப்படத்தின் கதை இதுதானா… என்னங்க இது அந்த படம் மாதிரிலா இருக்குது… இது சரியாக வருமா என சந்தேகம் எழுப்பும் ரசிகர்கள்….

- Advertisement -

கமல்ஹாசன் தற்போது தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மணிரத்தினம் இதனை இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர்கள் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்திருக்கிறது.

படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். அவர்தான் கேங்ஸ்டரின் தலைவர் என்பது சூட்டிங் தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியிலேயே தெரிய வந்தது. அதில் தன்னை காயல்பட்டினத்து காரன் என்று அடையாளப்படுத்திக் கொள்வார் கமல்ஹாசன்.

அது மட்டுமல்ல படத்தில் அவர் நெல்லை தமிழில் பேசுவது அந்த வீடியோவிலேயே தெரிய வந்தது. இதில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முதலில் அறிவித்தார்கள். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் இருவரும் படத்திலிருந்து வெளியேறினார்கள். அதற்கு பதில் சிலம்பரசன் படத்தில் வந்தார்.

இதேபோல் அசோக் செல்வனுக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. திரிஷா நாசர் அபிராமி உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள். டெல்லி ஜெய்சல்மார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதனை படமாக்கி இருக்கிறார் மணிரத்னம். வழக்கம்போல ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ஜிங்குச்சா பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கமல்ஹாசன் படத்தில், உலகமே அறியும் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக வருகிறாராம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக அவர் விளங்குவாராம்.

ஒரு கட்டத்தில் அவர் இறந்து விட்டதாக உலகமே அறிய, கமல்ஹாசன் மீண்டும் வருவது தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கமலின் மகனாக சிம்பு நடித்திருப்பதாகவும், இறுதியில் அவரே கமலுக்கு வில்லனாக மாறுவதாகவும் சொல்கிறார்கள். விக்ரம் திரைப்படத்தில் இப்படி தான் கமல் இறந்து போவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மீண்டும் வருவார் அதேபோன்று படம் எடுக்கப்பட்டிருக்கிறதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் செக்கச் சிவந்த வானம் போன்றே கதை இருக்கிறதே என்றும் பேசுகிறார்கள். வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சற்று முன்