போடா போடி படம் மூலம், இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இறுதியாக இவரது இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது.
நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநராக வரவேற்கப்படவில்லை. அதனால், நல்ல வெற்றி படங்களை இயக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இதற்கிடையே நடிகை நயன்தாராவை 7 காதலித்து, கடந்தாண்டில் திருமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு, வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் உள்ளனர். ரூ. 50 கோடி மதிப்பிலான சொந்த விமானத்தில்தான் இருவரும் வௌிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். நயன்தாரா, சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல பிஸ்னஸ்களிலும், முதலீடு செய்து வருகிறார்.
நயன்தாராவின் சம்பளம் ரூ. 12 கோடி என்ற நிலையில், அடுத்த பட வாய்ப்புக்காக, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார். படம் இயக்கும் வாய்பப்ற்ற சூழலில் வலிமை, ஜெயிலர் போன்ற படங்களுக்கு பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன.
துணிவு படத்துக்கு பிறகு, அஜீத் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பல மாதங்கள் அவர் காத்திருந்த நிலையில், கதை பிடிக்கவில்லை என அஜீத்குமார், விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை, ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அஜீத்குமாரே நிராகரித்து விட்டார் என்பதால், மற்ற பெரிய நடிகர்களும் விக்னேஷ் சிவனை கண்டுகொள்வது இல்லை.
இந்நிலையில், கடந்தாண்டில் லவ்டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ஒரு படத்தை இயக்க, விக்னேஷ் சிவனுக்கு கமிட் ஆனது. பிரதீப்புக்கு ஜோடியாக கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவும் முடிவானது. ஆனால், இன்னும் கால்ஷீட் தராமல் இதோ, அதோ விக்னேஷ் சிவனை இழுத்தடித்து ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்து கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இவருக்கு அஜீத் குமார் எவ்வளவோ பரவாயில்லை. உடனே நோ சொல்லி விட்டார் என புலம்பி வருகிறார் நயன்தாராவின் கணவர் விக்கி.





