ஆரம்பம் முதலில் தனது நடிப்புக்கான பாராட்டைப் பெற்று, மெல்ல மெல்ல உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் ஆலமரமாக விரிந்து இருப்பவர் தனுஷ். தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர், தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல ஹாலிவுட் திரை உலகிற்கும் அவர் சென்று விட்டார்.
இப்படியான சூழலில் தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனை அவரே இயக்கி இருப்பது இங்கு கூடுதல் சிறப்பு. படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார் அருண் விஜய். வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுபோக இந்தி திரைப்படத்திலும் தனுஷ் நடித்து முடித்து இருக்கிறார். ஆனந்த் எல்ராய் இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் தனுஷிற்கு விமானப்படை அதிகாரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சங்கர் என்னும் ரோலில் அவர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சிறிதும் இடைவெளி விடாமல் தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார் தனுஷ்.
போர் தொழில் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த, விக்னேஷ் ராஜா இதனை இயக்குகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜைகள் அண்மையில் நடைபெற்றன. மமீதா பைஜூ படத்தில் கதாநாயகியாக வருகிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ், மாரி செல்வராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படியான சூழலில் அவருக்கு வரும் 27ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை தனுஷ் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படியான சூழலில், தனுஷ் நடிப்பில் பாராட்டை அள்ளிய புதுப்பேட்டை திரைப்படம், வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மயக்கமென்ன திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் அது இங்கு அல்ல தெலுங்கு சினிமாவில் ரிலீஸ் செய்கிறார்கள். மிஸ்டர் கார்த்திக் என்ன பெயரில் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம், அங்கு வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் அந்த திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.





