- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்டவர் பிறந்தநாளில் தக் லைப் பற்றிய அறிவிப்பு... இத்தனை விஷயங்களையும் ஒரே நாளில் சொல்ல போறாங்களா.......

ஆண்டவர் பிறந்தநாளில் தக் லைப் பற்றிய அறிவிப்பு… இத்தனை விஷயங்களையும் ஒரே நாளில் சொல்ல போறாங்களா…. அப்போ… உலகநாயகன் ரசிகர்களுக்கு செம விருந்துதான் போல…

- Advertisement -

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறையில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். முதலில் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயனை வைத்து அமரன் திரைப்படத்தை அவர் தயாரித்தார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

 

- Advertisement -

இது ஒருபக்கம் இருக்க, படத்தில் நடிப்பதற்கும் கமல்ஹாசன் ஆர்வம் காட்டி வருகிறார். இதில் அவர் மணிரத்னத்துடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே இந்த இருவரும் இணைந்து நாயகன் எனும் காவியத்தை கொடுத்து அசத்தினர். 1987ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இப்போதும் பலருக்கு பேவரைட் என்று கூறலாம்.

 

- Advertisement -

சக்தி வேல் நாயக்கராக படத்தில் வாழ்ந்த கமல்ஹாசன், ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பின் மூலம் ஆச்சரியப்பட வைத்திருப்பார். இதற்காக அவர் தேசிய விருதையும் தட்டிச் சென்றார். இளையராஜாவின் இசை படத்திற்கு ஆகப்பெரும் பலமாக அமைந்தது. இப்படி நாயகன் திரைப்படத்தின் அம்சங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இணை மீண்டும் இணைந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு வீடியோவில் கமல்ஹாசன், தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்றும், தனது ஊர் காயல்பட்டினம் எனவும் கூறியிருப்பார். நாயகன் படத்திலும் அவரது பெயர் சக்திவேல் நாயக்கர் என்றே வரும். அதேபோல், தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கு செல்வது போன்று கதை அமைந்திருக்கும். இதிலும், அதேபோல் இருப்பதால் ஒருவேளை தக் லைப்க்கும், நாயகனுக்கும் தொடர்பிருக்கலாம் என பலர் ஆருடம் கூறி வருகிறார்கள்.

 

தக் லைப் படத்தின் சூட்டிங் பெரும்பாலும் வட இந்திய பகுதிகளிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இதில் கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு வருகிறார். த்ரிஷா, அபிராமி, நாசர், கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இதன் சூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், அண்மையில் மும்பையில் வைத்து த்ரிஷாவுக்கான பாடலை மட்டும் படமாக்கினார்கள்.

 

இதற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் நாளை (நவம்பர் 7ஆம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் தக் லைப் படத்திலிருந்து வீடியோ ஒன்று வெளியாக உள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும், தணிக்கை விவரமும் இடம் பெற்றிருக்கும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்