நடிகர் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் ஆதரவால் சினிமாவுக்குள் நுழைந்தார். அவர் நடித்த ஆரம்பகால படங்கள் சில சரியாக போகவில்லை. நடிகர் விஜயகாந்துக்கு தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் விஜய் நடித்தார். இந்த படம் விஜய்க்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை தந்தது. இந்த படத்தை இயக்கியது எஸ்ஏ சந்திரசேகர்.
தன்னுடைய பல படங்களை இயக்கிய நண்பர் என்ற முறையில் செந்தூரபாண்டி படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளம் கூட வாங்க மறுத்துவிட்டார். ஆனால் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்க வந்த நிலையில் உச்சத்தில் உள்ள விஜய், அவருக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் தி கோட் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய், நடிகர் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுப்பது போன்ற காட்சி இருந்தது. அரசியலுக்கு விஜய் சென்றதால் சினிமாவில் இனி தன் இடத்தில் சிவகார்த்திகேயன் இருக்கட்டும் என்று விஜயே இந்த காட்சியில் துப்பாக்கியை தந்ததாக ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது.
இந்த சூழ்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த படம் பராசக்தி, விஜய் நடித்த பராசக்தி படத்துடன் வரும் பொங்கல் பண்டிகைக்கு மோதுகிறது. ஆனால் இதற்கு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் அல்ல. அதற்கு அரசியல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன், விஜய்க்கு நன்றியாக நடந்துக்கொள்ளவில்லை என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்றுநேர்காணல் ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, விஜய்க்கு சிவகார்த்திகேயன் என்ன நன்றி பண்ண வேண்டும் என்று சொல்றீங்க? எனக்கு புரியவில்லை.
இப்போ விஜய் சிவகார்த்திகேயனுக்கு என்ன பண்ணி கொடுத்தார்? என்ன சிவகார்த்திகேயன் நன்றி மறந்து விட்டார்? சினிமாவில் ஒரு சீன் வருகிறது. அப்படி ஒரு காட்சியை டைரக்டர் படத்தில் வெச்சிருக்கிறார். அந்த காட்சியில் துப்பாக்கியை கையில் எடுத்து கொடுத்ததற்காக விஜய்க்கு சிவகார்த்திகேயன் நன்றியை காட்டணுமா? இது எல்லாம் ஒரு காரணமா? இதற்காக எல்லாம் சிவகார்த்திகேயன் நன்றியா இருக்கணுமா? என்று ஆவேசமாக திருப்பூர் சுப்ரமணியன் கேள்வி எழுப்பியது இணையத்தில் வைரலாகி வருகிறது.





