- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம், தயாரிப்பாளர் அவரா? - படத்தோட டைட்டிலே வேற...

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 64வது படம், தயாரிப்பாளர் அவரா? – படத்தோட டைட்டிலே வேற லெவல் சம்பவமா இருக்குதே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த 63வது படம் குட் பேட் அக்லி. கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகளாக அஜீத்குமாரின் அடுத்த படம் 64வது படம் ஷூட்டிங் துவங்காமல் தாமதம் நீடித்தது. தயாரிப்பாளர் இல்லாமல் அந்த படம் உருவாவது தடைபட்டது.

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் துபாய் இத்தாலி பிரான்ஸ் என பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸ்சில் ஆர்வமாக கலந்துக்கொண்டா். அஜீத்குமார் கா் ரேஸிங் என்ற அணியின் தலைவராக அவர் போட்டிகளில் பங்கேற்று பல போட்டிகளில் வெற்றியும் பெற்றார்.

- Advertisement -

நடிப்பில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸில் மட்டுமே அஜீத்குமார் அதிக ஆர்வமும் கவனமும் செலுத்தியது அவரது ரசிகர்களுக்கு பலத்த விரக்தியை தந்தது. அவர் படத்தில் நடிக்க ரூ. 185 கோடி வரை சம்பளம் கேட்டதால் அவரை வைத்த படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்றும் தகவல் பரவியது.

ஆனால் அஜீத்குமார் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் குறைத்துக் கொண்டதாகவும் அப்போதும் யாரும் அவரை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டது. ஏனெனில் அவரது படங்களுக்கு 225 கோடி ரூபாய் மட்டுமே வியாபாரம் இருப்பதாகவும் 110 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் முன்வந்ததாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த அஜீத்குமார் படம் எப்போது என அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் இப்போது ஏகே 64 படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு டேர் டெவில் என ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அஜீத்குமார் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர் வேறு யாருமல்ல, நடிகர் அஜீத்குமாரின் மனைவி ஷாலினிதான் என்ற லேட்டஸ்ட் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. இதுதான் ஷாலினி தயாரிக்கும் முதல் படமாகும். முதன் முறையாக இந்த படத்தின் மூலம் ஷாலினி தயாரிப்பாளராகிறார். மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

- Advertisement -

சற்று முன்