தமிழ் சினிமாவில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்களாக சிலர் இருப்பார்கள். அவர்கள் திரைத்துறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை ரசிகர்கள் ஒரு போதும் மறந்து விடுவது இல்லை. சில கலைஞர்கள் மறைவுக்கு பிறகும், ரசிகர்களின் மனதில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏனெனில் அவர்களது படைப்புத் திறன், கலை ஆற்றல், நடிப்பாற்றல் என பல விஷயங்கள் அவர்களை கொண்டாட வைக்கின்றன. கே பாலசந்தர், பாலு மகேந்திரா நாகேஷ் சிவாஜி கணேசன் போன்றவர்களை காலம் மறைய செய்தாலும், அவர்களது கலை என்றென்றும் அவர்களை நிரந்தமாக வாழவே செய்கிறது.
அதுபோல் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமான கலைஞர்தான் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ். இப்போதும் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றால் அவர்தான். அவரது படங்களில் காமெடி இருக்கும். காதலுக்கும் இருக்கும். எல்லாவற்றையும் விட அவரது நடிப்பிலும், கதையிலும் யதார்த்தம் இருக்கும்.
தனது மகள் சரண்யா குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என் பொண்ணோட காதலை என்னால ஜீரணம் பண்ணிக்க முடியல. இந்த ஜாதி மதம் பணம் எல்லாத்தையும் தாண்டி வேறொரு காரணம் இருந்தது. என் பொண்ணு தனியாக போனாள். நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம்.
ஆனால் அவன் கர்ப்பம் ஆயிட்டான்னு சொன்னதும் தாங்க முடியல. அப்புறம் பூர்ணிமா தான் கூடப் போச்சு. பையன் பொறந்திருக்கான்னு சொன்னவுடனே நானும் ஓடிப்போய் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். நான்தான் கையில் முதல்ல குழந்தையை வாங்கினேன்.
இப்போ அவனை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அவனுக்கும் நானில்லாமல் இருக்க முடியாது என்று கே பாக்யராஜ் வெளிப்படையாக பேசி இருக்கிறார். பல படங்களில் காதலை நியாயப்படுத்திய அவரால், சொந்த வாழ்க்கையில் மகள் காதலின் பக்கம் ஆதரவாக நிற்க முடியவில்லை என்ற வருத்தத்தை உணர்வுபூர்வமாக கே பாக்யராஜ் சொல்லியிருப்பது வைரலாகி வருகிறது.





