- Advertisement -
Homeபொழுதுபோக்குமாதவன் நடித்த ரன் படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? குஷி படத்துக்கு முதலில் சொன்ன டைட்டில்...

மாதவன் நடித்த ரன் படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? குஷி படத்துக்கு முதலில் சொன்ன டைட்டில் அதுவா? ரொம்ப வில்லங்கமாக இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கு தான் பல ஆண்டுகளாக பஞ்சம் நீடிக்கிறது என்றால் படத்தின் தலைப்புகளுக்கும் அதைவிட கடும் பஞ்சம் நீடிக்கிறது. படத்தின் தலைப்பை யோசிக்கவே இயக்குனர்களிடம் இவ்வளவு கற்பனை வறட்சி என்றால் படத்தின் கதை எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

படத்தின் டைட்டிலை கூட யோசிப்பதற்கு விரும்பாதவர்கள் தான் இன்றைக்கு டைரக்டர் பொறுப்பில் இருக்கிறார்களா? என்று விரக்தியாக ரசிகர்களுக்கு கேட்கத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்றைய சினிமாவில் பெரும்பாலான படங்கள் கதாநாயகனின் பெயரை டைட்டிலாக கொண்டுதான் வெளி வருகின்றன. அதேபோல் பழைய படங்களின் டைட்டில்களை இப்போது புதிய படங்களுக்கு வைப்பதும் ஃபேஷனாக மாறிவிட்டது.

- Advertisement -

இதில் கசப்பான உண்மை என்னவென்றால் படத்துக்கு டைட்டில் வைக்க யோசிக்க கூட முடியாத இயக்குனர்கள் பழைய படங்களிலிருந்து கதைகளை உருவுவது போல நல்ல டைட்டில்களையும் அப்படியே சுட்டு இன்றைய படங்களுக்கு வைத்து விடுகின்றனர். உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பழைய படங்களின் டைட்டில்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரை பழைய பட டைட்டில் மன்னன் என்று கூட சொல்லலாம்.

நடிகர் மாதவன் மீரா ஜாஸ்மின் ரகுவரன் அனுஹாசன் விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ரன். இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் ஜோதிகா நடித்த படம் குஷி. இந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.

- Advertisement -

ஆனால் இந்த படங்களுக்கு முதலில் வைக்கப்பட்டது இந்த டைட்டில்கள் அல்ல. வேறு டைட்டில்கள் வைக்கப்பட்டு பிறகு இந்த டைட்டில்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த ஒரு முக்கிய தகவலை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி சமீபத்தில் கூறியிருக்கிறார். இயக்குனர் லிங்குசாமி ஒரு நேர்காணலில் கூறியதாவது, ரன் படத்துக்கு முதலில் வைத்த டைட்டில் பிடிச்சிருக்கா? என்பதுதான்.

ஆனால் டைட்டிலை ஏன் இப்படி டவுட்டா வைக்கணும்? பிடிக்கலைன்னு படம் பார்த்துட்டு கிண்டலா சொல்லிடுவாங்க என்று ரன் என மாற்றினோம். குஷி படத்துக்கு எஸ்ஜே சூர்யா முத்தம் என்று டைட்டில் சொன்னார். டிக்கெட் கவுண்டர்ல போய் 2 முத்தம் கொடுங்க என்று கேட்க முடியுமான்னு சொன்னேன். அதனால டைட்டில் மட்டும் மாத்தணும்னு சொன்னார். அவர் சொன்ன டைட்டில் தான் ரன் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்