- Advertisement -
Homeபொழுதுபோக்குஐஸ்வர்யா ராஜேஷை ஓரங்கட்டிய டாப் நடிகர்கள், அப்படி ஒரு முடிவை எடுத்ததுக்கு இதுதான் காரணமா?

ஐஸ்வர்யா ராஜேஷை ஓரங்கட்டிய டாப் நடிகர்கள், அப்படி ஒரு முடிவை எடுத்ததுக்கு இதுதான் காரணமா?

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கதாநாயகிக்கு முன்னுரிமை கொடுக்கும் திரைப்படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மிக பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மிகவும் யதார்த்தமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதே போல் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக இருக்கும்.

தமிழகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரு Dusky Beauty ஆக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் அவர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னை டாப் நடிகர்கள் ஒதுக்கியது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட ஒரு சில ஹீரோக்கள் தவிர,வேறு யாருமே அவருக்கு வாய்ப்புகள் வழங்கவில்லையாம். அதே போல் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கூட ஐஸ்வர்யா ராஜேஷை புறக்கணித்துள்ளார்களாம். அவருக்கு பதில் வேற்று மாநிலத்தில் இருந்து நடிகைகளை இறக்கிவிடுவார்களாம்.

இந்த காரணத்தினால்தான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் “ஃபர்ஹானா”, “தீரா காதல்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்கள் வணிக ரீதியாக வசூல் ஆகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் “மோகன்தாஸ்”, “தீயவர் கொலை நடுங்க” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் “புலிமாடா”, “ஹர்” ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்