- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடிப்பில் ஹிட் அடித்த இந்த படத்தில் இத்தனை நடிகர்கள் நடிக்க மறுத்தார்களா? என்னப்பா சொல்றீங்க?

சூர்யா நடிப்பில் ஹிட் அடித்த இந்த படத்தில் இத்தனை நடிகர்கள் நடிக்க மறுத்தார்களா? என்னப்பா சொல்றீங்க?

- Advertisement -

சூர்யா தற்போது இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா தொடக்கத்தில் மிகவும் சாதாரண நடிகராக வலம் வந்தாலும் “நந்தா” திரைப்படம் அவரை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது. அதன் பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஆகிப்போன சூர்யா, பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஒரு மாஸ் ஹிட் திரைப்படத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அது யார் யார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “தீனா”, ரமணா” போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய பிறகு மீண்டும் அஜித்தை வைத்து இயக்குவதற்காக அவரிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை மிகவும் பிடித்துப்போக அஜித்தும் ஓகே சொல்லியிருக்கிறார். “மிரட்டல்” என்ற பெயரில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தில் இருந்து அஜித் விலகிகொண்டார்.

அதனை தொடர்ந்து இந்த கதையை சிம்பு, விக்ரம், மாதவன் போன்ற பலரிடமும் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் யாருக்கும் இந்த கதை பிடிக்கவில்லை. அதன் பிறகுதான் இந்த கதையை சூர்யாவிடம் கொண்டு சென்றிருக்கிறார். சூர்யாவிற்கு இந்த கதை மிகவும் பிடித்துப்போக அவரும் ஓகே சொல்லியிருக்கிறார். அப்படி உருவான திரைப்படம்தான் கஜினி. சூர்யாவின் சினிமா கெரியரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் “கஜினி” என்றால் அது மிகையாகாது.

சற்று முன்