- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த உச்ச நட்சத்திரத்துடன் இணையும் டாப் ஸ்டார்... கம்பேக் கொடுத்து சிக்ஸர்...

தளபதி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த உச்ச நட்சத்திரத்துடன் இணையும் டாப் ஸ்டார்… கம்பேக் கொடுத்து சிக்ஸர் விளாசும் நடிகர்…

- Advertisement -

90களில் பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்து டாப் ஸ்டார் ஆக உயர்ந்தவர் நடிகர் பிரசாந்த். செம்பருத்தி திரைப்படத்திலிருந்து தொடங்கி, ஆணழகன், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி என பிரசாந்தின் வெற்றி திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

- Advertisement -

குறிப்பாக ஜீன்ஸ் திரைப்படம் பிரசாந்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இரட்டை சகோதரர்களாக நடித்திருந்த பிரசாந்த், ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமாக தெரிந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஷங்கரின் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

 

- Advertisement -

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரசாந்த், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக திரைத்துறையில் இருந்து விலகினார். பிறகு ஒரு சிறிய இடைவேளை விட்டு அவர் படங்களில் நடித்து வர, அவை அனைத்தும் படு தோல்வியை சந்தித்தனர். மம்பட்டியான், பொன்னர் சங்கர், ஜாம்பவான், ஆயுதம் என பிரசாந்த் நடித்த எந்த திரைப்படங்களும் ஓடவில்லை.

 

இதனால் சினிமாவில் இருந்து விலகினார் பிரசாந்த். இந்த நிலையில் தான் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கைப்பற்றினார். தமிழில் அந்தகன் என்னும் பெயரில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

 

அந்தத் திரைப்படத்தின் சுவாரசியம் குறையாமல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றது. இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரசாந்த் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது விஜயின் கோட் திரைப்படத்திலும் நடித்திருக்கும் பிரசாத் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்து முடித்திருக்கிறார்.

 

குறிப்பாக விஜய் பிரசாந்த் உடனான காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அவர் சூர்யாவின் 44வது திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், பிரசாந்தை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாம். இந்தத் தகவலால் டாப் ஸ்டார் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்