- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இந்த விஷயத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கோட்டை விட்டுட்டாரா? - இரண்டு நாயகிகள் இருந்தும்...

அட இந்த விஷயத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கோட்டை விட்டுட்டாரா? – இரண்டு நாயகிகள் இருந்தும் அந்த விஷயத்தை படத்துல கொண்டு வரலையே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் 956 திரைகளில் இந்த படம் ரிலீஸாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஏராளமான பழைய பாடல்களை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பயன்படுத்தி இருக்கிறார். அதிலும் தீனா பில்லா அமர்க்களம் வாலி என அஜீத்குமார் நடித்த பழைய படங்களில் இருந்து ரெபரென்ஸ் என்ற பெயரில் பல காட்சிகளை, பாடல்களை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.

- Advertisement -

அதே நேரத்தில் ஒத்த ரூபா தாரேன் என்ற மெகா ஹிட் பாடலையும் படத்தில் வில்லன் அர்ஜூன்தாஸ் பாடி ஆடுவது போன்ற காட்சியை அமைத்திருக்கிறார். அதே போல் நடிகர் அஜீத்குமார், சகலகலா வல்லவன் படத்தில் கமல் பாடிய இளமை இதோ இதோ என்ற பாடலையும் பாடுவது போல் காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

அதே நேரத்தில் நடிகர் அஜீத்குமாரின் மனைவியாக திரிஷாவும், முன்னாள் தோழியாக சிம்ரனும் நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவருமே கடந்த 1990களில் முன்னணி நாயகிகளாக இருந்தவர்கள். அதிலும் திரிஷா இப்போதும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருப்பவர் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

நடிகை திரிஷா பல படங்களில் விஜய் அஜீத்குமாருடன் குத்தாட்ட பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தியவர். குறிப்பாக அப்படி போடு போடு கட்டு கட்டு கீரை கட்டு கோழி வெடக்கோழி சமீபத்தில் வெளியான தி கோட் படத்தில் மட்ட என பல பாடல்களில் அவரது நடனத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்திருக்கின்றனர். ஆனால் அவருக்கு இந்த படத்தில் அஜீத்குமாருடன் ஒரு பாடல் கூட இல்லை.

அதே போல் நடனத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சிம்ரன். இந்த படத்தில் வரும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு கூட எதிரும் புதிரும் படத்தில் நடனம் ஆடியவர் சிம்ரன்தான். ஆல்தோட்ட பூபதி பாடலில் இன்றும் சிம்ரன் நடனத்தை அப்படி ரசிக்கலாம். அப்படிப்பட்ட சிம்ரனுக்கும் இந்த படத்தில் அஜீத்குமாருடன் நடனக்காட்சி இல்லை. திரிஷா சிம்ரன் என 2 நாயகிகள் நல்ல டான்ஸர்களாக இருந்தும் அவர்களை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பயன்படுத்திக்கலையே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்