- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போ இதிலும் அவர் முரட்டு சிங்கிள் தானா? தக்லைப் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த...

அப்போ இதிலும் அவர் முரட்டு சிங்கிள் தானா? தக்லைப் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகை திரிஷா – மும்பையில் நடந்து வரும் தரமான சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. லேசா லேசா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரிஷா, விக்ரமுடன் நடித்த சாமி படம் மூலம் பிரபல நடிகையாக மாறினார். தொடர்ந்து விஜயுடன் கில்லி ஆதி குருவி திருப்பாச்சி லியோ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். ரஜினி, கமல், அஜீத், விக்ரம், சிம்பு என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

இடையில் சற்று அவரது மார்க்கெட் சரிந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் திரிஷா நடித்த 96 படம் மீண்டும் அவரை முன்னிலைக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் படத்தில் குந்தவை கேரக்டர் பெரிய அளவில் திரிஷாவுக்கு வரவேற்பை பெற்று தந்து. இப்போது நயன்தாரா திரிஷா என 2 டாப் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக திரிஷா தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கடந்தாண்டில் விஜயுடன் லியோ படத்தில் நடித்ததை தொடர்ந்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் அஜீத் குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஸ்வாரம்பம் என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கில் அவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மலையாளத்திலும் 2 முக்கிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் படம் உருவானது. இந்த படத்தில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஜோஜூ ஜார்ஜ் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

- Advertisement -

ரெட் ஜெயிண்ட் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் என 3 தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தக்லைப் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. தொடர்ந்து ராஜஸ்தான் டெல்லி புதுச்சேரி கோவா உள்ளிட்ட பகுதிகளில் 120 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதில் ஒரு பாடல் காட்சி மட்டுமே மீதமிருந்த நிலையில், தற்போது திரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தக்லைப் படத்தின் பாடல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த ஆல்பத்தில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிம்பு திரிஷா இருவருக்கிடையே உள்ள காதல் பாடல் படப்பிடிப்பும் மும்பையில் நடந்து வருகிறது. தொடர்ந்து நடிகர் கமல் தனக்கு ஜோடி இல்லாமல் நடித்து விடுகிறார். விக்ரம் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. இப்போது தக்லைப் படத்திலும் கமல்ஹாசன் முரட்டு சிங்கிளாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்