- Advertisement -
Homeபொழுதுபோக்கு2025ம் ஆண்டில் வெளியாகும் நடிகை திரிஷாவின் படங்கள் இத்தனையா? - குந்தவை காட்டுல பெரிய...

2025ம் ஆண்டில் வெளியாகும் நடிகை திரிஷாவின் படங்கள் இத்தனையா? – குந்தவை காட்டுல பெரிய அடைமழை தான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா. கடந்த 2003ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா லேசா என்ற படம் மூலம் நாயகியாக திரிஷா அறிமுகமானார். நாயகனாக ஷாம் நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் திரிஷா நடித்தார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஆனால் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படம் ஓரளவு திரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் திரிஷாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. கமர்ஷியல் ஹீரோவாக விக்ரமுக்கும் அந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் திரிஷா பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். நடிகர் விஜயுடன் கில்லி ஆதி குருவி திருப்பாச்சி லியோ படங்களில் திரிஷா நடித்தார். அதே போல் அஜீத்குமார் சூர்யா ஜெயம் ரவி என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் குந்தவை கேரக்டரில் திரிஷா நடிப்பு வேற லெவலில் இருந்தது.

குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிற மொழிகளிலும் திரிஷாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. தொடர்ந்து லியோ படத்திலும் அதன்பிறகு விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களிலும் நடித்த திரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மௌனம் பேசியதே ஆறு படங்களை தொடர்ந்து இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 45 வது படத்திலும் நாயகியாக திரிஷா நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. 40 வயதுகளை கடந்து இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் திரிஷா, அதுபற்றிய விருப்பம் இல்லை என்றும் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

நடப்பு 2025ம் ஆண்டில் இதுவரை திரிஷா நடித்த விடாமுயற்சி குட் பேட் அக்லி மற்றும் மலையாளத்தில் அவர் நடித்த ஐடென்டி என்ற 3 படங்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர தெலுங்கில் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா 45 மற்றும் தக்லைப் ஆகிய 3 படங்கள் வெளிவர இருக்கின்றன. இப்போது 3 படங்கள் வெளியாகி அடுத்த 3 படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில் அரை டஜன் படங்களுடன் திரிஷா முன்னிலையில் இருக்கிறார். இன்னும் சில படங்களில் அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்