- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா படத்துக்கு 3 மாதங்களாக டப்பிங் பேசாமல் இழுத்தடித்த நடிகை திரிஷா - கடைசியில்...

நடிகர் சூர்யா படத்துக்கு 3 மாதங்களாக டப்பிங் பேசாமல் இழுத்தடித்த நடிகை திரிஷா – கடைசியில் ஐபிஎல் மேட்ச் தான் காப்பாற்றியதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளத்திலும் முக்கிய நாயகியாக இருந்து வருகிறார். சமீபத்தில் விஜயுடன் திரிஷா திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இப்போது நடிகை திரிஷா நடிகர் சூர்யாவுடன் கருப்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். ஏறக்குறைய நீண்ட இழுபறிக்கு பிறகுதான் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கருப்பு படத்துக்கு 3 மாதங்களுக்கு மேலாக டப்பிங் பேசாமல் நடிகை திரிஷா இழுத்தடித்துள்ளார். வழக்கமாக திரிஷாவுக்கு பாடகி சின்மயி தான் பின்னணி குரல் கொடுப்பது வழக்கம். அவரது பல படங்களில் திரிஷாவின் குரலாக ஒலித்தது பாடகி சின்மயி குரல்தான். லியோ படத்தில் கூட திரிஷாவுக்கு சின்மயிதான் குரல் கொடுத்திருந்தார்.

நாயகனாக சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தில் பாடகி சின்மயி தான் தனக்கு பின்னணி குரலில் பேச வேண்டும் என்று நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கும் திரிஷாவுக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் 3 மாதங்களாக திரிஷா கருப்பு படத்துக்கு பின்னணி பேசவே இல்லை. அப்போது கிருத்திகா நெல்சன் என்ற டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து சில டெஸ்ட் எல்லாம் எடுத்து அவரை திரிஷா குரலில் டப்பிங் பேச வைக்கவும் ஒரு முயற்சி நடந்துள்ளது. ஆனால் அது நடக்கவில்லை.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு கருப்பு படத்தின் டப்பிங்கை நடிகை திரிஷாவே சொந்த குரலில் பேசி முடித்து கொடுத்திருக்கிறார். இந்த மன மாற்றத்துக்கு காரணம், சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் மேட்சுக்கு நடிகை திரிஷாவும் சென்றிருக்கிறார். அங்கே ஆர்ஜே பாலாஜி வர்ணனையாளராக இருப்பதால் திரிஷாவும் அவரும் ஜாலியாக பேசிய நிலையில் திரிஷா மனம் மாறி கருப்பு படத்துக்கு டப்பிங் பேசி தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்