- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் எப்போதுமே மாஸ்தான்.. ஜெயிலருக்காக லீவு விட்ட கம்பெனி

தலைவர் எப்போதுமே மாஸ்தான்.. ஜெயிலருக்காக லீவு விட்ட கம்பெனி

- Advertisement -

ரஜினி நடித்த படங்களிலேயே எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பும், முக்கியத்துவமும் ஜெயிலர் படத்துக்கு எழுந்திருக்கிறது. வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி, சூப்பர் ஸ்டார் நாற்காலி கண்டிருக்கும் ஆட்டம் என ரஜினி தன்னை ஜெயிலர் மூலம் நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. அவரின் நிலைமைதான் நெல்சன் திலீப்குமாருக்கும். பீஸ்ட்டில் ரோஸ்ட் ஆக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்.

பான் இந்தியா படமாக ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகிறது. மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் தமன்னாவுக்கு சின்ன ரோல்தான் என கூறப்படுகிறது. முத்துவேல் பாண்டியன் என்ற ரிட்டையர்டு ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

- Advertisement -

ட்ரெய்லர் மெகா வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல்தான் பாடல்களும். நேற்றுக்கூட ஜெயிலரிலிருந்து நான்காவது சிங்கிளுக்கான லிரிக்கல் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் அதற்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் க்ளிக்காகியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பலரும் டிக்கெட்டை புக் செய்தனர். இந்தச் சூழலில் இந்தியாவில் இன்றுதான் டிக்கெட் புக்கிங் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ரஜினி நடித்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. கடைசியாக அண்ணாத்த வெளியாகியிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து வெளியாவதாலும், சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்க்கிறார். அதன் காரணமாக டிக்கெட் புக்கிங்கும் ஜரூராக நடந்துவருவதாகவே தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஜெயிலர் படத்துக்காக ஆகஸ்ட் பத்தாம் தேதி தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருக்கிறது. யூனோ ஆக்வா கேர் என்ற நிறுவனம் சென்னை, பெங்களூரு,திருச்சி,திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் கிளைகளுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது.

அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், எங்கள் தாத்தா தலைமுறை, எங்கள் தலைமுறை, எங்கள் மகன் தலைமுறை, எங்கள் பேரன்கள் தலைமுறைகளுக்கெல்லாம் ரஜினிகாந்த்தான் ஒரே சூப்பர் ஸ்டார். அவரது பட ரிலீஸை முன்னிட்டு விடுமுறை அளிக்கிறோம் என குறிபிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவர்தான் எப்போதுமே மாஸ் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்