வரும் பொங்கல் பண்டிகைக்கு சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் லால் சலாம் படம், ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதுவும் பொங்கல் ரிலீஸ் என உறுதியாகி உள்ளது.
அயலான், அரண்மனை 4, லால் சலாம் ஆகிய 3 படங்களையும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியீடு செய்வதால், 3 படங்களையும் ஒரே சமயத்தில் வெளியீடு செய்தால், வருவாய் குறையும் என்பதால் லால் சலாம் படத்தை ஜனவரிக்கு 26க்கு தள்ளி வைக்க முடிவானது.
ஆனால் கடைசியில் பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் ரிலீஸாவது கேள்விக்குறியாக மாறிவிட்டதால் அரண்மனை 4, லால் சலாம் படங்கள் ரிலீஸாவது உறுதியாகி விட்டது. அதுமட்டுமின்றி கேப்டன் மில்லரும் ஜனவரி 26ம் தேதிக்கு மாற்றப்படுவதாவும் துவக்கத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் ஜனவரி 26ம் தேதிக்கு முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் செய்யப்படும் என, அந்த படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது, வேறு விதமான விமர்சனங்களை கிளப்பி விட்டுள்ளது.
அதாவது தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய, ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்த லால் சலாம் படத்துக்கு எதிராக, போட்டியாகவே கேப்டன் மில்லர் படத்தை தனுஷ், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இது தனுஷின் ஒருவிதமான வன்மத்தின் வெளிப்பாடு என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல், அயலான் படத்தை தோற்கடிக்க, தங்கலான் படத்தை களத்தில் இறக்குவதாக, ஞானவேல் ராஜாவும் பிளான் செய்ததாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.
ஆனால், அயலான் படம் இப்போதைக்கு ரிலீஸ் குறித்து எந்த அதிகாரபூர்வமாக தகவலும் இல்லை. இதற்கிடையே லால் சலாம் படத்துக்கு எதிராக, கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் செய்யவில்லை. ஜனவரி 26ம் தேதிக்கு தான் கேப்டன் மில்லர் படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அன்று பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் ரிலீஸ் ஆவதால், இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டாம், அதனால் வசூல் பாதிக்கும் என்பதால் மட்டுமே, பொங்கல் பண்டிகைக்கு கேப்டன் மில்லர் ரிலீஸ் செய்வதாக, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ரஜினிகாந்த் கவனத்துக்கு இந்த விவரம் கொண்டு செல்லப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளது.





