- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரும் வெற்றி பெற்ற வாழை திரைப்படத்திற்கான ஓடிடி ரிலீஸ் தேதி வந்தாச்சு... குறித்து வச்சுக்கோங்க...

பெரும் வெற்றி பெற்ற வாழை திரைப்படத்திற்கான ஓடிடி ரிலீஸ் தேதி வந்தாச்சு… குறித்து வச்சுக்கோங்க மக்கா…

- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படம் தான் வாழை. தனது சொந்த கிராமமான புளியங்குளத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை அவர் எடுத்தார். சிறுவயதில் தான் கஷ்டப்பட்ட அனுபவங்களை தான் இந்த திரைப்படத்தின் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியிருந்தார்.

 

- Advertisement -

வாழையை சுமக்கும் சிறுவனின் கஷ்டத்தையும், அதன் பின்னால் இருக்கும் குடும்ப வாழ்க்கையையும் தன்னால் முடிந்தவரை சுவாரசியமாக காட்டியிருந்தார் மாரி செல்வராஜ். 1999 ஆம் ஆண்டு வாழை சுமக்கும் தொழிலாளிகள் லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை கதையாகத்தான் அவர் எடுத்திருந்தார்.

 

- Advertisement -

நிலம் சார்ந்த கதைகளை எந்த ஊரில் உறுத்தலும் இல்லாமல் அப்படியே காட்டுவதில் கைதேர்ந்தவர் ஆக உள்ள மாரி செல்வராஜ், வாழை திரைப்படத்திலும் அதை செய்து வென்று காட்டினார். குறிப்பாக படத்தில் இடம்பெற்ற பலரும் தனக்கான பணிகளை சரியாக செய்திருந்தனர்.

 

சிவனனைந்தன் கதாபாத்திரத்தில் வந்த சிறுவனும், அவனுடன் சேகர் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனும் மிக இயல்பாக நடித்திருந்தனர். கிளைமாக்ஸ் காட்சியை மையமாக வைத்தே மாரி செல்வராஜ் கதையை எழுதி இருப்பது படம் பார்க்கும் அனைவருக்கும் நன்றாக புரிந்தது.

 

ஆனால் காட்சியை நகர்த்த வேண்டும் என்பதற்காகவே அவர் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தை வைத்திருப்பதாகவும் அதில் எந்தவிதமான சுவாரசியமும் இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ஆசிரியரின் கைகுட்டையை மாணவன் முகர்ந்து பார்ப்பது எல்லாம், இயல்பை மீறி இருப்பதாக பலரும் தெரிவித்தனர். ஆசிரியர் கதாபாத்திரத்திற்காக தான், அந்த எட்டு பட்டி ராசா பாடல் திணிக்கப்பட்டு இருந்ததாகவும் இங்கு பேசப்பட்டது.

 

இருப்பினும் இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலை எந்த ஒரு விதத்திலும் பாதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது வாழை திரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி வரும் 11ஆம் தேதி இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை திரைப்படம் முதலில் நேரடியாக ஓடிடி தளத்திற்காக தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்