ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பெரிய வெற்றிகளை விட அடுத்தடுத்து கிடைக்கும் பலத்த தோல்விகள்தான் அவனை பக்குவப்படுத்துகின்றன. எப்போதுமே தோல்விதான் மனிதர்களை சிந்திக்க வைக்கிறது. வெற்றி என்பது கொண்டாடப்படும் சந்தோஷமாக மட்டுமே இருந்து விடுகிறது. அதனால் தொடர் தோல்விகளை சந்தித்த நடிகர் சூர்யா, இப்போது எதிலும் தெளிவாக இருக்கிறார்.
முன்பு போல இயக்குனர் தயாரிப்பாளர் தனது கேரக்டர் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் இந்த கதை இந்த கேரக்டர் இந்த கதைக்களம் நமக்கு செட் ஆகுமா, ரசிகர்களால் வரவேற்கப்படுமா என்பதை பலமாக யோசித்து விட்டுதான் களத்தில் இறங்குகிறார். எதிலும் அவசர முடிவுகளை அவர் எடுப்பதில்லை.
ஏற்கனவே கங்குவா தானா சேர்ந்த கூட்டம் அயலான் காப்பான் மாசு என்கிற மாசிலாமணி சிங்கம் 3 போன்ற பல படங்களில் அவருக்கு கிடைத்த மிக மோசமான தோல்வி காரணமாக தனது படங்கள் வெற்றி படங்களாக மட்டுமே இனி இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனமாக இருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை தயாரிப்பாளர் தாணு இயக்குவது முடிவானது. கங்குவா படத்தை அடுத்து வாடிவாசல் படத்தில்தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரெட்ரோ படத்தில் சூர்யா நடித்தார்.
பிறகு ஆர்ஜே பாலாஜி படம் மற்றும் இப்போது தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் நடிக்கிறார். அதனால் வாடிவாசல் படப்பிடிப்பு தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின் படி வருகிற அக்டோபர் மாதம்தான் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்கும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி சூரி நடித்த விடுதலை 2 படத்தை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இயக்குனர் வெற்றிமாறன் ஷூட்டிங் நடத்தினார். அதுபோல வாடிவாசல் படப்பிடிப்பையும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு வெற்றிமாறன் இழுத்துவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் சூர்யாவுக்கு உள்ளது. அதனால் வாடிவாசல் படத்தின் பவுண்டர் ஸ்கிரிப்ட்டை கொடுங்கள் என அவர் கேட்கிறார். அதை ரெடி செய்யாமல் வெற்றிமாறன் தாமதித்துக் கொண்டே வருவதால்தான், வாடிவாசல் ஷூட்டிங் தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.





