- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசன் எழுதிய கதையில் வடிவேலுவா? மறுபடியும் “அதே” மாதிரியான ஒரு ஸ்டோரியா? ஏன் இப்படி?

கமல்ஹாசன் எழுதிய கதையில் வடிவேலுவா? மறுபடியும் “அதே” மாதிரியான ஒரு ஸ்டோரியா? ஏன் இப்படி?

- Advertisement -

வடிவேலு ஒரு புகழ்பெற்ற காமெடி நடிகராக இருந்தாலும் பல திரைப்படங்களில் சீரீயஸான காட்சிகளிலும் ஸ்கோர் செய்பவராக திகழ்ந்து வந்தவர். எனினும் “மாமன்னன்” திரைப்படம் வடிவேலுவை முழுக்க முழுக்க ஒரு சீரீயஸான நடிகராக காட்டியது. வடிவேலுவின் நடிப்பு பார்வையாளர்கள் பலருக்கும் கண்ணீரை வரவழைத்தது என்று கூட கூறுகிறார்கள். அந்தளவிற்கு மனதை உறுக வைக்கும்படி நடித்திருந்தார் வடிவேலு.

“மாமன்னன்” திரைப்படத்தை தொடர்ந்து வடிவேலு இது போல சீரீயஸான கதாபாத்திரங்கள் பல ஏற்று நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் ஒரு அசத்தலான கதையில் வடிவேலு நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

“மாமன்னன்” திரைப்படத்தில் வடிவேலு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது பலரும் அறிந்ததே. இந்த அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வடிவேலு மிகவும் கச்சிதமாக நடித்திருந்தார். இந்த நிலையில் “மாமன்னன்” கதாபாத்திரம் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதே போல அரசியல்வாதியை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி அதில் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளாராம்.

கமல்ஹாசனும் வடிவேலுவும் “தேவர் மகன்” திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். “தேவர் மகன்” இசக்கி கதாபாத்திரம்தான் “மாமன்னன்” வடிவேலு என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூட “மாமன்னன்” இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். “தேவர் மகன்” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனும் வடிவேலுவும் அவ்வளவாக இணைந்து நடிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் கமல்ஹாசனின் ஒரு அரசியல்வாதி கதையில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளிவருகிறது. இந்த தகவலால் வடிவேலுவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்