- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பையன் என்னை லவ் பண்றியா? என் அப்பாவை லவ் பண்றியான்னு என்கிட்ட கேட்டான் -...

அந்த பையன் என்னை லவ் பண்றியா? என் அப்பாவை லவ் பண்றியான்னு என்கிட்ட கேட்டான் – நடிகை வனிதா விஜயகுமார் போட்ட அடுத்த குண்டு!

- Advertisement -

சமீபத்தில் ரிலீஸான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை நடிகை வனிதா விஜயகுமார் முதன் முறையாக டைரக்சன் செய்து அவரே நாயகியாக நடித்தும் இருக்கிறார். கதை திரைக்கதை வசனத்தையும் அவரே எழுதியிருக்கிறார். மேலும் இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா முதன்முறையாக தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில் அடல்ட் கன்டென்ட் அதிகமாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் இளையராஜா இசையில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற கமல் – ரூபிணி நடித்த பாடல் காட்சியை இந்த படத்தில் டைரக்டர் வனிதா விஜயகுமார் பயன்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்து அவர் அனுமதி பெற்ற நிலையிலும், இப்போது தனது இசையில் உருவான பாடலை பயன்படுத்தியதற்காக நடிகை வனிதா விஜயகுமார் மீது இளையராஜா தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இதனால் வனிதா விஜயகுமார் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் இதுகுறித்து பேசிய வனிதா விஜயகுமார், நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவ. அந்த வீட்டுக்காக நான் அவ்வளவு உழைச்சிருக்கேன் என்றார். இப்போது தன்னிடம் அந்த வீட்டு பையன் தன் காதலை சொன்னதாக ஆவேசமாக பேசி மற்றொரு பெரிய குண்டை போட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறியதாவது, அந்த குடும்பத்துல ஒரு விஷயம் நடந்தது. அப்பக்கூட அந்த பையன் என்னை கேட்டான். நீ என்னை லவ் பண்றியா, இல்ல வந்து என் அப்பாவை லவ் பண்றியான்னு. சத்தியமா உங்க அப்பாவை தான் லவ் பண்றேன்னு சொன்னேன்.இதெல்லாம் நடந்தது.

இத்தனை வருஷமா யாருக்காவது உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? நான் சொல்லி இருக்கேனா? நான் பேசாம இருந்திருக்கேன். அவ்ளோ விஷயங்கள் நடந்தது. இவ்ளோ தூரம் நான் பொறுமையா போனேன். வார்த்தையை விட்டுடுவேன். நான் உண்மையை சொல்லிடுவேன். வேண்டாம். இத்தனை வருஷமா அடக்கி வெச்சிருந்தேன் பேச வேண்டிய நேரம் வந்துடுச்சு என்று வனிதா விஜயகுமார் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்