- Advertisement -
Homeபொழுதுபோக்குசொந்த குடும்பத்துல நடந்த திருமண விழாவில், மகளா பங்கேற்க முடியலே - ஆத்திரத்துல ‘சிங்கமாக’ மாறிய...

சொந்த குடும்பத்துல நடந்த திருமண விழாவில், மகளா பங்கேற்க முடியலே – ஆத்திரத்துல ‘சிங்கமாக’ மாறிய வனிதா விஜயகுமார் – கேப்ஷனை பார்த்து சிரிக்காதீங்க!

- Advertisement -

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள். இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவை தான் பலருக்கும் தெரியும். விஜயகுமார் மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் ப்ரீத்தா, இயக்குநர் ஹரியின் மனைவி. வனிதா, ஸ்ரீதேவி இருவருமே படங்களில் நடித்துள்ளனர்.

விஜயகுமாரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு. விஜயகுமார் – முத்துக்கண்ணு தம்பதிக்கு அனிதா, கவிதா, அருண்விஜய் ஆகியோர் பிள்ளைகள். இதில் அருண்விஜய் நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது விஜயகுமாரின் பேத்தி ( அனிதா மகள்) தியாவின் திருமண விழா நடந்தது. இதில் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisement -

ஆனால் இந்த திருமண விழாவுக்கு, விஜயகுமார் மகள் வனிதாவுக்கு அழைப்பும் இல்லை. அவர் வருகையை விஜயகுமார் உள்பட அவர் குடும்பம் சார்ந்த யாருமே விரும்பவில்லை. அதனால் அவரை கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டனர். இதற்கு காரணம், எப்போதும் தன் குடும்பத்தை பற்றியும், தன் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றியும் அடிக்கடி பேட்டி தந்து வனிதா விஜயகுமார் அவர்களை தவறாக விமர்சனம் செய்ததுதான்.

அப்பா விஜயகுமார் மீது கோபம் இருப்பதற்காக அவரை மட்டுமே பேசாமல், குடும்பத்தில் உள்ள ப்ரீத்தா, ப்ரீத்தாவின் கணவர் ஹரி, ஸ்ரீதேவி, அருண்விஜய், அவரது அக்காக்கள் என அனைவரையுமே, வனிதா விஜயகுமார் பலமுறை கேவலப்படுத்தி பேசியிருக்கிறார். அதனால் அவரை வீட்டுக்குள் விட்டால் மீண்டும் பிரச்னை என யாருமே வனிதாவை, தியா திருமணத்துக்கு அழைக்கவில்லை.

- Advertisement -

விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணு மகள்கள், மகன் அருண்விஜய் தன்னை அழைக்காவிட்டாலும், தன் உடன்பிறந்த சகோதரிகள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோராவது தன்னை கண்டுகொள்வார்களா என, வனிதா எதிர்பார்த்தார். ஆனால், வனிதாவை திருமணத்துக்கு அழைத்தால் இருக்கிற நிம்மதியும் இழந்து விடுவோம் என்ற அச்சத்தில், அவர்களும் சத்தமின்றி இருந்து விட்டனர். இதனால் விஜயகுமார் குடும்பத்தில் மூத்த நபர்களில் ஒருவரான வனிதா இல்லாமல், அந்த வீட்டின் வாரிசு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து நடிகை வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிங்கம் ஒன்று தனியா நடந்து வருவதை போன்ற ஒரு வீடியோவை அப்டேட் செய்திருக்கிறார். அதில், மொத்த கூட்டமும் ஒரு இடத்தில் ஒன்று சேரும்போது, நீங்கள் சிங்கம் போல தனியாக இருந்தால், எவ்வளவு பவர்புல்லான ஆளாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்