எப்போதுமே விஜய் நடித்த படங்களுக்கான அப்டேட்டுகளை தளபதி ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். அதனால் அவ்வப்போது படக்குழு தரப்பில் இருந்து பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் பர்ஸ்ட் சிங்கள் செகண்ட் சிங்கிள் என பாடல்கள் டீசர் டிரெய்லர் பிரமோ என அடிக்கடி அப்டேட் தந்து விஜய் ரசிகர்களை வைப் ஏற்றி விடுவது வழக்கமாக உள்ளது.
ஆனால் ஜனநாயகன் படத்தை பொருத்த வரை இந்த அப்டேட் விஷயங்கள் பல மாதங்களாக நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களாகியும் படத்தின் ரிலீஸ்க்கு 6 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்ததால் படம் குறித்த தகவல்களை படக்குழு தரப்பில் வெளியிடாமல் அமைதி காத்தனர்.
ஏனென்றால் படம் ரிலீஸாக உள்ள சில வாரங்களில் இருந்து அப்டேட்ஸ் வந்தால்தான் தளபதி ரசிகர்களிடம் அதிக வைப் இருக்கும். படத்துக்கும் அது சரியான பிரமோசனாக அமையும் என்று திட்டமிட்டு அப்டேட்டுகளை வெளியிடாமல் வைத்திருந்தனர். இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் இருந்து 3 சிங்கிள்கள் இதுவரை வெளிவந்துவிட்டன.
இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் டிசம்பர் 31ம் தேதி, அதாவது நேற்று இரவு 12 மணிக்கு, சரியாக 2026ம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. இது புத்தாண்டு நாளில் விஜயின் பரிசாக தளபதி ரசிகர்களுக்கு அமையும் என்றும் சொல்லப்பட்டது. இதற்காக தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் அறிவித்தபடி ஜனநாயகன் டிரெய்லர் நேற்றிரவு வெளியாகவில்லை. இன்று இதுவரை டிரெய்லர் வரவில்லை. நாளை மறுதினம் அதாவது வரும் 3ம் தேதி அல்லது 5ம் தேதி தான் இந்த டிரெய்லர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகாமல் போக காரணம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான் என்று கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் டிரெய்லர்க்கான இசையை அனிருத் தரவில்லை. கடந்த 27ம் தேதி நடந்த மலேசியா விழாவில் அவர் 3 நாட்களாக கவனம் செலுத்தியதால் டிரெய்லர் இசைக்காக கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் வரும் 3ம் தேதி அல்லது 5ம் தேதி ஜனநாயகன் டிரெய்லர் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே வரும் 4ம் தேதி ஜீ5 டிவியில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு விழா 6 மணி நேரம் வரை ஒளிப்பரப்பாக உள்ளது.





